பக்கம் எண் :


பழநி67

பெற்றனன். இவன் மகப்பேறு இன்றி வருந்தினான். இவனுடைய மனைவியர் இருவர்; கேசினி, சுமதி என்பவர். இவ்விரு மனைவியரோடும் சகரன் மகப்பேறு வேண்டி இமயமலை சென்று, பிறகு சிரவணன் என்ற மலைச்சாரலில் நூறு ஆண்டுகள் தவமிருந்தான். பிருகு முனிவர் மனமிரங்கி “சிறந்த புதல்வர்கள் உனக்குப் பிறப்பார்கள், உனது மனைவியர் இருவருள் ஒருத்திக்கு குலத்தை வளர்க்கும் ஒரு புதல்வனும், மற்றொருத்திக்கு அறுபதினாயிரம் புதல்வரும், உண்டாவார்கள்” என்று வரமளித்தார். இவ்வாறு வரமளித்தலும் அரசன் மனைவியர் இருவரும் இருடியை இறைஞ்சி “எங்களிருவருள் யாருக்கு ஒரு குழந்தை பிறக்கும்? யாருக்குப் பல குழந்தைகள் உண்டாகும்? என்று வினவினார்கள். பிருகு முனிவர் அவர்களைப் பார்த்து, “உங்களுக்குள் யாருக்கு குலத்தை நிலைநிறுத்தும் ஒரு குழந்தை வேண்டும்? யாருக்கு நிகரற்ற ஆற்றலும் கீர்த்தியுமுடைய பல குழந்தைகள் வேண்டும்? அதை நீங்களே கேளுங்கள்” என்றார். அப்பொழுது விதர்ப்ப நாட்டிறைவன் மகளும் மூத்தவளுமாகிய கேசினி “எனக்குக் குலத்தை வளர்க்கும் ஒரு குழந்தை வேண்டும்” என்றாள். கருடனுடைய தங்கையும் இளையாளுமாகிய சுமதி “சிறந்த பலமுடைய அறுபதினாயிரம் வீரர்கள் வேண்டும்” என்றாள். அவர் அந்த வரத்தை நல்கினார். அரசனும் அவன் மனைவியரும் முனிவரை வலம் வந்து வணங்கி நகரமடைந்தார்கள்.

சின்னாட்களுக்குப் பின் கேசினி அஸமஞ்சன் என்ற ஒரு குழந்தையைப் பெற்றாள். சுமதி ஒரு கர்ப்ப பிண்டத்தை யீன்றாள். அதிலிருந்து பல கருக்களை நெய்நிறைந்த பாத்திரங்கிளிலிட்டுச் செவிலித் தாய்மார் பலர் வெகுகாலம் காப்பாற்றி வந்தனர். அவற்றினின்று அறுபதினாயிரம் புதல்வர்கள் தோன்றினார்கள். அவர்களுள் மூத்தவனான அஸமஞ்சன், துஷ்டனாக இருந்தான். நாள்தோறும் இளங்குழந்தைகள்ப் பிடித்துத் தூக்கிச் சரயூ நதியில் போடுவதும் அவர்கள் தண்ணீர் குடித்துத் தத்தளிக்கும்போது வேடிக்கை பார்ப்பதும்,