மஞ்சமி ருந்தநு ராக விந்தைகள் தந்த டம்பிக ளுற லுண்டிடு மண்டைகள் கண்டிதமாய் மொழிந்திடு முறையாலே சஞ்சல முந்தரு மோக லண்டிகள் இன்சொல்பு ரிந்துரு காததொண்டிகள் சங்கம மென்பதை யேபுரிந்தவ னயராதே தங்களில் நெஞ்சக மேம கிழ்ந்தவர் கொஞ்சிந டம்பயில் வேசை முண்டைகள் தந்தசு கந்தனை யேயு கந்துடல் மெலிவேனோ கஞ்சன்வி டுஞ்சக டாசு ரன்பட வென்றுகு ருந்தினி லேறி மங்கையர் கண்கள்சி வந்திட வேக லந்தரு முறையாலே கண்டும கிழ்ந்தழ காயி ருந்திசை கொண்டுவி ளங்கிய நாளி லன்பொடு கண்குளி ருந்திரு மால்ம கிழ்ந்தருள் மருகோனே குஞ்சர வஞ்சியு மான்ம டந்தையு மின்பமி குந்திட வேய ணைந்தருள் குன்றென வந்தருள் நீப முந்திய மணிமார்பா கொந்தவி ழுந்தட மேநி ரம்பிய பண்புத ருந்திரு வாவினன்குடி குன்றுக ளெங்கணு மேவ ளர்ந்தருள் பெருமாளே. பதவுரை கஞ்சன் விடும்-கம்சன் விடுத்த, சகடாசுரன் பட-வண்டி யுருவத்தில் வந்த அசுரன் மாண்டு ஒழியுமாறு, வென்று-வென்றவரும், குருந்தினில் ஏறி- கோபிகைகளின் ஆடைகளைக் கவர்ந்து கொண்டு குருந்த மரத்தின் மீது ஏறிக்கொண்டவரும், மங்கையர் கண்கள் சிவந்திடவே கலந்து-உருக்குமணி சத்தியபாமை முதலிய பெண்களின் கண்கள் சிவக்குமாறு புணர்ந்து, அருமுறையாலே கண்டு மகிழ்ந்து-அரிய தருமமுறையை நிலைபெறுமாறு புரிந்து அதனால் மகிழ்ச்சியடைந்து, அழகாய் இருந்து-அழகாக இருந்து, இசை கொண்டு விளங்கிய நாளில் அன்பொடு கண் குளிரும்-வேணு நாதத்தை உண்டாக்கிச் சிறந்த அக்காலத்தில் உயிர்களிடம் அன்போடு கருணை செய்து கண்கள் குளிர்ந்தவரும் ஆகிய, திருமால் மகிழ்ந்து அருள்-நாராயணமூர்த்தி மனம் மகிழ்ந்து அருள்கின்ற, மருகோனே-திருமுருகரே! குஞ்சரவதியும்- வெள்ளை யானை வளர்த்த தேவயானையம்மையாரும், மான் மடந்தையும்- மான் பெற்ற வள்ளி நாச்சியாரும், இன்பம் மிகுந்திடவே அணைந்தருள்-மிகுந்த இன்பத்தையடையுமாறு தழுவியருளுகின்ற, |