பக்கம் எண் :


74திருப்புகழ் விரிவுரை

பூங்கொத்துகள் மலர்கின்ற நீர்நிலைகள் நிரம்பியதும், பண்பாட்டினைத் தருவதும் ஆகிய திருவாவினன்குடியிலும், ஏனைய மலைகள் எல்லாவற்றிலும் எழுந்தருளியுள்ள பெருமிதம் உடையவரே! வஞ்சனை மிகுந்த மாயத்தைச் செய்யும் வம்புக்காரிகளும், தம்மிடம் வந்தவர்களைத் துன்புறுத்துவோர்களும், உண்மையான அன்பு இன்றி, அன்புபோல் பலவிதமாகப் பேசி, சயன மெத்தியின் மீது இருந்து கலவி வித்தைகளைத் தருகின்ற பொல்லாதவர்களும், இதழ் ஊறலையுண்ணும் வேசையரும், கண்டிப்பாகப் பேசி சஞ்சலத்தைத் தருகின்ற மோகப் பெண்களும், இன்சொற்களை மேலுக்குப் பேசி உள்ளம் உருகாத வேலைக்காரிகளும் ஆகிய விலைமாதர்களின் கூட்டுறவையே விரும்பிய யான், அதில் அயர்ச்சியின்றி அம்மகளிரிடமே உள்ளம் உவந்து, வாழ்ந்து, கொஞ்சியும், நடனம் புரிந்தும், அவ்வேசை மாதர்கள் தந்த சுகத்தையே விரும்பும் அடியேன் உடல் மெலியக் கடவேனோ?

விரிவுரை

இப்பாடலில் அருணகிரிநாத சுவாமிகள் பொதுமாதர்களின் இழிசெயலைக் கூறிக் கண்டிக்கின்றனர்.

வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்:-

வஞ்சனை மிகுந்த மாயம் பல புரிகின்ற வம்புக்காரிகள். தம்பால் வந்த ஆடவர்கள் தம்மை உண்மை அன்புடையவராக நம்புமாறு நடந்தும், தாலி கட்டிய மனைவியையும் ஏனைய உறவினரையும் வெறுக்குமாறும் பல தோதக வித்தைகள் புரிவார்கள். தங்கள் ஆபரணங்கள் களவு போனதாக நடித்து அதுபோன்ற ஆபரணங்களைச் செய்து தருமாறு பெறுவார்கள்.

வந்தவர் தங்களை வாதை கண்டவர்:-

தம்மை விரும்பி வந்தவர்களைப் பலவகையிலும் துன்புறுமாறு செய்து விடுவார்கள். மோக வெறிபிடித்த