ஆடவர், அம்மகளிர்க்கு ஒழியாது அள்ளி அள்ளி பணத்தையீந்து, அதனால் வீட்டையும், நிலத்தையும் விற்றுக் கடன்காரர்களாகக் கலங்கியும், நோவாய்ப் பட்டும், மனைவி முதலியவர்களின் பகைக்கு ஆளாகியும் ஊரவர்கள் ஏசும் இகழ்ச்சிக்கும், பழிக்கும் பாத்திரராகியும் ‘இனி நாம் என் செய்வோம்’ என்று கலங்குமாறும் செயல்புரிவர். வங்கணமுந் தெரியாம லன்புகள் பல பேசி:- உள்ளன்பு இன்றி, “உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள்; வரவர இளைத்துப் போகின்றீரே! நல்ல மருந்தாக உண்டு உடம்பைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். பணத்தை அதிகம் செலவிழிக்காதீர்கள்; பணம் இருந்தால் தானே யாரும் மதிப்பார்கள். உங்களுக்குத் தெரியாதது என்ன இருக்கின்றது? நான் ஞாபகப் படுத்துகின்றேன்” என்று பகட்டாகப் பேசுவார்கள். மஞ்சமிருந்தநுராக விந்தைகள் தந்த கடம்பிகள்:- பஞ்சனையுடன் கூடிய கட்டிலில் ஆடவருடன் இருந்து, ஆசையை விளைவிக்குங் கலவி வித்தைகள் பல காட்டிய மயக்கும் பொல்லாதவர்கள். கடம்பு-தீமை. “வித்தாரமும் கடம்பும் வேண்டா மடநெஞ்சே செத்தாரைப் போலே திரி” -பட்டினத்துச் சுவாமிகள் ஊறலுண்டிடு மண்டைகள்:- மோக வெறியால் இதழில் ஊறும் நீரை யுண்ணுகின்ற மட்டிகள். “குமுத அமுத இதழ் பருகி யுருகி மயல் கொண்டுற் றிடுநாயேன்” -(கொலைமத) திருப்புகழ் கண்டிதமாய் மொழிந்திடு லண்டிகள்:- பெரிய அன்புடையாரைப் போல் கண்டிப்பாகப் பேசி, மயக்கி மனத் துயரத்தைத் தருபவர். “இங்கே வாருங்கள்; எழுந்தவுடன் சிறிது பால் குடியுங்கள்; இல்லையேல் உடல் நலன் குன்றும். நீர் இதனை |