“சேயோன் மேய மைவரையுலகமும்” -தொல்காப்பியம் தீபமங்கள் ஜோதீ:- அருட்பெருஞ் ஜோதியாண்டவர் அறுமுகக் கடவுளே என்பதை பிறிதொரு பாடலிலும் விளக்குகின்றார். “நிர்த்த ஜெக ஜோதிப் பெருமாளே” -(இத்தரணி) திருப்புகழ் தூய அம்பல லீலா:- ஆன்மாக்களினது இதய புண்டரீகத்திலுள்ள தகரா காயத்தில் குகப் பெருமான் ஓவாது நடனம் புரிந்து கொண்டிருக்கிறார். அவ்விருதய வெளியை பரவியோமம் சிதம்பரம், சிதாகாசம், தகராகாசம், சிற்றம்பலம், ஞானாம்பரம், அந்தராகாசம் எனப் பல பெயர்களால் சுருதிகளுரைக்கும். “அணோரணீ யாந் மஹதோ மஹீயாந் ஆத்மா குஹாயாம் நிஹிதோஸ்ய ஜந்தோ” -நாராயண உபநிடதம். ஈதலும் மறவாத:- மனு நீதிச் சோழன் அரசு செய்யும் பாக்கியத்தைப் பெற்ற சோழ மண்டலத்திலுள்ளோர், ஈகை, பூஜை, கல்வி, குணம், ஒழுக்கம், நீதி, கருணை, குருசேவை இவற்றுடன் கூடிய உத்தமர்கள் என்பதை மிகவும் அழகாகக் கூறுகின்றார். ராஜ கெம்பீர நாடு:- ராஜகெம்பீர நாடு என்பது வயலூரைச் சூழ்ந்துள்ள நாடு: வயலூரைச் சூழ்ந்துள்ள அந்நாட்டில் சாசனங்கள் எழுதும்போது ராஜகெம்பீர நாடு என எழுதுவதை இக்காலத்திலும் காணலாம். ஆதரம் பயில ஆரூரா:- சமய குரவர் நால்வர்களில் சுந்தரர் ஞானத்தில் யோகம் என்ற நெறிக்கு ஆச்சாரியர். யோகம்-மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், |