பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 1

ஓம் குஹாய நம

திருப்புகழ் விரிவுரை

திருவேரகம் (சுவாமிமலை)

1

   கடிமா மலர்க்கு ளின்ப முளவேரி கக்கு நண்பு
                   தருமா கடப்ப மைந்த                        தொடைமாலை
         கனமேரு வொத்தி டும்ப னிருமாபு யத்த ணிந்த
                   கருணாக ரப்ர சண்ட                           கதிர்வேலா
    வடிவார் குறத்தி தன்பொ னடிமீது நித்த முந்தண்
                   முடியான துற்று கந்து                         பணிவோனே
         வளவாய்மை சொற்ப்ர பந்த முளகீர னுக்கு கந்து
                   மலர்வாயி லக்க ணங்க                         ளியல்போதி
   அடிமோனை சொற்கி ணங்க வுலகாமு வப்ப என்று
                   னருளால ளிக்கு கந்த                         பெரியோனே
         அடியேனு ரைத்த புன்சோ லதுமீது நித்த முந்த
                   ணருளே தழைத்து கந்து                        வரவேணும்
    செடிநேரு டற்கு டம்பை தனின்மேவி யுற்றி டிந்த
                   படிதான லக்க ணிங்க                          ணுறலாமோ
      திறமாத வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த
                   திருவேர கத்த மர்ந்த                          பெருமாளே

பதவுரை

கடி-வாசனை தங்கியதும், மா-பெருமை பொருந்தியதும், மலர்க்குள் இன்பம் உள-புட்பங்களுக்குள் இன்பத்தைத் தருவதும், வேரிகக்கு-தேன் துளிப்பதும், நண்புதரு-அருச்சிப்பதனால் உம்முடைய நட்பைத்தர வல்லதும் ஆகிய, மா கடப்பு அமைந்த-பெரிய கடப்ப மலர்களாகக் கொண்டு புனைந்த, தொடை மாலை-தொடுக்கப்பெற்ற