வார்குழ லைச்சொரு கிக்கரு விற்குழை காதொடி ணைத்தசை யக்கதிர் பற்கொடு வாயிதழ் பொற்கம லர்க்குமி ழொத்துள துண்டக்ரீவ வார்கமு கிற்புய நற்கழை பொற்குவ டாடிள நிர்ச்சுரர் பொற்குட மொத்திணை மார்பழ கிற்பொறி முத்தொளிர் சித்திர ரம்பைமாதர் காருறும் வித்திடை யிற்கத லித்தொடை சேரல்குல் நற்பிர சத்தட முட்கொடு கால்மறை யத்துவ ளச்செறி பொற்கலை யொண்குலாவக் கார்குயி லைக்குர லைக்கொடு நற்றெரு மீதில்நெ ளித்துந கைத்துந டிப்பவர் காமனு கப்பம ளிச்சுழல் குத்திரர் சந்தமாமோ சூரர்ப தைக்கர வுட்கிநெ ளித்துய ராழியி ரைப்பநி ணக்குடலை லைக்கழு குழந ரிக்கெரு டக்கொடி பற்பல சங்கமாகச் சூழ்கிரி யைக்கைத டித்தும லைத்திகை யானையு ழற்றிந டுக்கிம தப்பொறி சோரந கைத்தயி லைக்கொடு விட்டருள் செங்கைவேலா ஏரணி நற்குழ லைக்கக னச்சசி மோகினி யைப்புணர் சித்தொரு அற்புத வேடமு தச்சொரு பத்தகு றத்திம ணங்கொள்வோனே ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு வாமிம லைப்பதி நிற்குமி லட்சண ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள் தம்பிரானே பதவுரை சூரர்பதைக்க-சூராதி அவுணர்கள் பதைக்கவும், அரவு உட்கி நெளித்து- ஆதிசேடன் அஞ்சி நெளியவும், உயர் ஆழி நிரைப்ப-பெரிய |