கடல் ஒலிக்கவும், நிண குடலை கழு சூழ-மாமிசக் குடலைக் கழுகுகள் சூழவும், நரி கெருட கொடி பல்பல சங்கம் ஆக-நரிகள் கருடன் காக்கை இவைகள் பல பல கூட்டமாய் நெருங்க, சூழ்கிரியை கைதடித்து-வஞ்சனை சூழ்ந்த கிரவுஞ்ச மலையின் வலிமையை அழித்து, மலை-எட்டுத் திசைகளிலுள்ள மலைகளையும், திகை யானை உழற்றி நடுக்கி-திசைகளில் காவல் புரியும் யானைகளையும் உழலும்படி நடுங்கவைத்து, மதபொறி சோர நகைத்து-அவைகளின் அகங்காரம் நிறைந்த அறிவு சோரும்படி நகைத்து, அயிலைக் கொடு விட்டு அருள்செம்கை வேலா-வேலைக்கொண்டு செலுத்தியருளிய சிவந்த கரத்தையுடைய வேலவரே! ஏர் அணி நல் சூழலை-அழகுள்ள நல்ல கூந்தலையுடையவளும், ககன சசி மோகினியை புணர்-விண்ணுலகத்து இந்திராணி வளர்த்த பேரழகியுமாகிய தேவ யானையைக் கலந்த, சித்த-சித்தமூர்த்தியே! ஒரு அற்புத-ஒப்பற்ற அற்புதமான, வேட அமுத சொருபத்த-வேடர்குலத்து உதித்த அமுதவடிவான, குறத்தி மணம் கொள்வோனே-வள்ளியம்மையை மணம் புரிந்தவரே! ஏரகவெற்பு எனும்-திருவேரகமலை என்று கூறுகின்ற, அற்புதம் மிக்க-அதிசயம் மிகுந்த, சுவாமிமலை பதி நிற்கும்-சுவாமிலை யென்ற திருத்தலத்தில் எழுந்தருளி யுள்ள, இலட்சண-அழகிய, ராஜதலக்ஷண லக்ஷுமி பெற்று அருள்-ராஜத குணங்கள் பொருந்திய உமையம்மை பெற்றருளிய, தம்பிரானே-தலைவரே! வார்குழலை சொருகி-நீண்ட கூந்தலைச் சொருகி, கரு-பெரியவில் ஒளி பொருந்திய, குழை காதோடு இணைத்து அசைய- குழையணிந்துள்ள காதுடன் (அக்கூந்தலைப்) பொருந்தி அசையும்படி விட்டும், கதிர் பல்கொடு-ஒளிவிடும் பற்கள் கொண்டும், வாய் இதழ்-(பவழம் போன்ற) வாய் இதழ், பொற்க-அழகுசெய்ய, மலர்குமிழ் ஒத்துள-குமிழ மலர் போன்றுள்ள, துண்ட-நாசியைக் கொண்டும், க்ரீவ வார் கமுகில்-கழுத்தாகிய நீண்ட கமுகு கொண்டும், புயநல் கழை-புயங்களாகிய மூங்கிலைக் கொண்டும், பொன்வடு-பொன்மலை போன்றும், ஆடுஇளநீர்-அசைகின்ற இளநீர் போன்றும், சுரர் பொன்குடம் ஒத்து-தேவர் அமுதம் நிறைந்த அழகிய குடம் போன்றும், இணை-இணைந்துள்ள இரு கொங்கைகள் கொண்டும், மார்பு அழகில் பொறி-மார்பில் அழகிய தேமல், முத்து ஒளிர்- முத்துமாலைகள் கொண்டு விளங்கும், சித்திர ரம்பை மாதர்-அழகிய ரம்பை போன்ற விலைமாதர்கள், கார் உறும் வித்து இடையில்-மேகத்தில் காணப்படும் மின்னல்போன்ற இடையும், கதலி தொடை-வாழைப் போன்ற தொடையும், சேர் அல்குல் பிரசத்தடம்-தொடையுடன் சேர்ந்துள்ள அல்குலாகியத் தேன் பொதிந்துள்ள இடமும், உள் கொடுகால் மறைய துவள செறி பொன்மலை ஒண்குலாவ-உட்கொண்டு கால் வரை மறையும்படித் தொங்கி நெருங்கும் அழகியப் புடைவை நன்கு விளங்க, கார்குயிலை குரலைகொடு-கரிய குயிலின் குரல் போன்ற குரலைக்கொண்டு பேசி, நல்தெரு மீதில் நெளித்து-அழகியத் தெருவில் உடலை நெளித்து நின்று, நகைத்து நடிப்பவர்-புன்னகைப் புரிந்து நடனம் புரிபவர்கள், காமன் உகப்ப அமளி |