விரிவுரை இத்திருப்புகழில் முதல் நான்கு அடிகளிலும் பொது மாதர்களின் அவயவங்களைப் பற்றிக் கூறியுள்ளார். ஐந்து ஆறாவது அடிகளில் சூரபன்மனைப் போர்க்களத்தில் வென்றதைக் கூறியுள்ளார். காருறும் வித்து:- கார், உறும், வித்து என்று பதப்பிரிவு செய்க. கார்-மேகம், உறும்- போன்ற, வித்து-மின்னல். சூரர்பதைக் கரவுட்கி:- சூரர் பதைக்க, அரவு, உட்கி என்று பதப்பிரிவு செய்க. சூரர் பதைக்க-சூராதி யவுணர்கள் பதைக்க, அரவு-ஆதிசேடன், உட்கி- அஞ்சி நெளிய. ஏரணி நற்குழலை:- அழகு நிறைந்த நல்ல அளகபாரத்தை உடையவள். பெண்களுக்குக் கூந்தலின் அழகு நிறைந்தது. சசிமோகினி:- சசி-இந்திராணி, மோகினி-இந்திராணி வளர்த்த தேவயானை. அமுதச் சொருபத்து:- வள்ளிப்பிராட்டி அமுத வடிவானவர். ஏரக வெற்பெனும் அற்புதமிக்க சுவாமிலை:- திருவேரகம் என்ற தலமே சுவாமிமலை என்று அறிக. கருத்துரை வேலாயுதரே! சுவாமிமலை யண்ணலே! பொது மாதரின் நட்பு அற அருளுவீர். மருவே செறித்த குழலார் மயக்கி மதனா கமத்தின் விரகாலே |