பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 149

  மயலே யெழுப்பியிதழே யருத்த
                மலைபோல் முலைக்கு                        ளுறவாகிப்
பொருகாத லுற்ற தமியேனை நித்தல்
                பிரியாது பட்ச                                மறவாதே
      பிழையே பொறுத்து னிருதாளி லுற்ற                      
                பெருவாழ்வு பற்ற                          அருள்வாயே
குருவா யரற்கு முபதேசம் வைத்த
                குகனே குறத்தி                              மணவாளா
      குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து
                குடகா விரிக்கு                              வடபாலார்
திருவே ரகத்தி லுறைவா யுமைக்கொர்
                சிறுவா கரிக்கு                            மிளையோனே
      திருமால் தனக்கு மருகா அரக்கர்
                சிரமே துணித்த                             பெருமாளே

பதவுரை

குருவாய்-குருமூர்த்தியாய், அரற்கும் உபதேசம் வைத்த- சிவபெருமானுக்கும் உபதேசஞ் செய்த, குகனே-குருமூர்த்தியே! குறத்தி மணவாளா-வள்ளி மணவாளரே! குளிர்கா மிகுந்த-குளிர்ந்த சோலைகளால் நிறைந்து, வளர்பூகம் எத்து-வளர்ந்துள்ள பாக்கு மரங்கள் சேர்ந்துள்ள, குடகாவிரிக்கு வடபால் ஆர்-மேல் திசையிலிருந்து வரும் காவிரி நதிக்கு வடப்பக்கத்து விளங்கும், திருவேரகத்தில் உறைவாய்-திருவேரகம் என்னுந் திருத்தலத்தில் உறைபவரே! உமைக்கு ஓர் சிறுவா-உமாதேவியின் ஒப்பற்ற புதல்வரே! கரிக்கும் இளையோனே-யானைமுகமுடைய விநாயகருக்குத் தம்பியே! திருமால் தனக்கு மருகா-நாராயண மூர்த்தியின் திருமருகரே! அரக்கர் சிரமே துணித்த-அசுரர்களுடையத் தலைகளை வெட்டி எறிந்த, பெருமாளே-பெருமையின் மிகுந்தவரே! மருவ செறித்த குழலார்- மருக்கொழுந்து முதலிய நறுமணங்கள் நிரம்பிய கூந்தலையுடைய மாதர்கள், மயக்கி-அடியேனை மயங்க புரிந்து, மதன ஆகமத்தின் விரகாலே-காம சாத்திரத்தின் தந்திரத்தினால், மயலே எழுப்பி-மோகத்தை உண்டாக்கி, இதழே அறுத்த-இதழமுதைப் பருக வைக்க, மலைநேர் முலைக்கு உள் உறவு ஆகி-மலைப் போன்ற தனங்களில் விருப்புற்று, பெருகாதல் உற்ற தமியேனை-பெரிதும் ஆசைப் பூண்ட திக்கற்ற என்னை, நித்தல் பிரியாது- தேவரீர் தினமும் பிரியாமலும், பட்சம் மறவாதே-என் மாட்டு அன்பு மறவாமலும், பிழையே பொறுத்து-அடியேனுடையக் குற்றங்களை மன்னித்து, உன் இருதாளில் உற்ற பெருவாழ்வு பற்ற அருள்வாயே-உமது இரு திருவடிகளிலும் பொருந்தியுள்ள பெருவாழ்வான பேரின்பத்தைப் பற்றுமாறு அருள்புரிவீர்.