பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 151

பெருகாத லுற்ற தமியேனை நித்தல் பிரியாது பட்ச மறவாதே:-

“மிகுந்த ஆசை வயப்பட்ட அடியேனை முருகா! நீ பிரியாமல் தினமும் என்மீது பட்சம் வைத்து மறவாமலும் ஆளவேண்டும்”.

பிழையே பொறுத்து:-

சிறியேன் செய்த பிழைகள் யாவையும் பொறுத்தருள வேணும். முருகன் பிழைப் பொறுக்கும் பேரருளாளன்.

“புரிபிழை பொறுக்குஞ் சாமி” -(புவிக்குள்) திருப்புகழ்

இருதாளிலுற்ற பெருவாழ்வு பற்ற அருள்வாயே:-

கிரியா சக்தி, ஞான சக்தி என்ற இரு சக்திகளும் இறைவனுடைய இரு திருவடிகள். அவைகளில் பொருந்தும் பேரின்ப வாழ்வினைத் தருமாறு அடிகளார் வேண்டுகின்றார்.

காவிரிக்கு வடபாலார் திருவேரகம்:-

இப்பாடலிலும், காவேரிக்கு வடக்கேயுள்ளது திருவேரகம் என்று மிக விளக்கமாக அருணகிரியார் கூறியிருப்பதை அன்பர்கள் கவனிக்கவும். ஆகவே, திருவேரகம் நாஞ்சில் நாட்டில் உள்ளது என்றும், மலைநாட்டில் உள்ளது என்றும், கூறி மயங்கற்க. அருணகிரியார் முருகவேளின் அருள்பெற்ற ஞானமூர்த்தி. அவருடையத் திருவாக்கு பரம பிரமாணமாகும்.

ஆகவே, சோழநாட்டில் காவிரிக்கு வடக்கேயுள்ள சுவாமிமலைதான் திருவேரகம் எனவுணர்க.

கருத்துரை

திருவேரகத்துறைத் திருமுருகா! பேரின்பப் பெருவாழ்வு பெற அருள்.

36

செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
                திருமாது கெர்ப்ப                            முடலூறித்