தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில் திரமாய ளித்த பொருளாகி மகவாவி னுச்சி விழியாந நத்தில் மலைநேர்பு யத்தி லுறவாடி மடிமீத டுத்து விளையாடி நித்த மணிவாயின் முத்தி தரவேணும் முகமாய மிட்ட குறமாதி னுக்கு முலைமேல ணைக்க வருநீதா முதுமா மறைக்கு ளொருமாபொ ருட்குள் மொழியேயு ரைத்த குருநாதா தகையாதெ னக்கு னடிகாண வைத்த தனியேர கத்தின் முருகோனே தருகாவி ரிக்கு வடபாரி சத்தில் சமர்வேலெ டுத்த பெருமாளே பதவுரை முக மாயம் இட்ட-முக வசீகரங் கொண்ட, குறமாதினுக்கு-வள்ளி பிராட்டியினிடம், முலைமேல் அணைக்க வறும் நீதா-தனங்களை அணைய வந்த நீதிபதியே! முதுமா மறைக்கு உள்-பழைமையும் சிறப்பும் உடைய வேதத்தின், ஒரு மா பொருட்டு உள் மொழியே உரைத்த-ஒப்பற்ற பெரும் பொருள்களுக்குள்ளே யுள்ள பிரணவப் பொருளை உபதேசித்த, குருநாதா- குருநாதரே! தகையாது-தடையொன்றுமின்றி, எனக்கு உன் அடி காண வைத்த-அடியேனுக்கு உமது திருவடித் தரிசனத்தைத் தந்த, தனி ஏரகத்தின் முருகோனே-ஒப்பற்ற திருவடி திருவேரகத்துறையும் முருகப்பெருமானே! தரு காவிரிக்கு வடபாரிசத்தில்-தருக்கள் நிறைந்த காவிரி நதியின் வடப்புறத்தில், சமர் வேல் எடுத்த பெருமாளே-போருக்குரிய வேலைத் தாங்கிய பெருமையின் மிகுந்தவரே! செக மாயை உற்று-உலக மாயையில் சிக்குண்டு, என் அக வாழ்வில் வைத்த-என் இல்லற வாழ்வில் ஏற்பட்ட, திருமாது கெர்ப்பம் உடல் ஊறி-அழகிய மனைவியின் கருவில் உடலில் ஊறி, தெச மாதம் முற்றி-பத்து மாதம் நிறைந்து, வடிவாய் நிலத்தில் திரம் ஆய் அளித்த-அழகுடன் பூமியில் நன்கு தோன்றிய, பொருள் ஆகி-குழந்தை போல் தேவரீர் அமைய, மக அவாவின்-அடியேன் உம்மைக் குழந்தைப் பாசத்துடன், உச்சி-உச்சி மோந்தும், விழி-கண்ணில் ஒத்தியும், ஆநநத்தில்- முகத்தோடு முகம் சேர்த்தும், மலை நேர் புயத்தில் உறவு ஆடி-எனது மலைப்போன்ற புயத்தில் நீர் உறவாடியும், மடிமீது அடுத்து விளையாடி-என் மடிமீதில் அமர்ந்து விளையாடியும், நித்தம்-நாள்தோறும், மணிவாயின் முத்தி தரவேணும்-உமது மணி வாயினால் முத்தந் தந்தருளவேண்டும். |