விட்டது. ஆகவே பாம்பனடிகளுடன் முருகன் குழந்தையாக விளையாடி யருளினார். வருநீதா:- வள்ளிபிராட்டியின் தவமுதிர்ச்சி கண்டு பரிபக்குவம் வந்த போது முருகன் வந்து ஆட்கொண்டருளினார். அதனால் ‘நீதிபதியே‘ என்றார். யான் என்னும் செருக்கு அற்றார்பால் இறைவன் குருவடிவாக வந்து அருள் புரிதல் அவருடைய அருள்நீதியாகும். மொழியே யுரைத்த குருநாதா:- சுவாமிமலையில் பிதாவுக்கு முருகன் குருவாய் அமர்ந்து பிரணவப் பொருளை உபதேசித்தார் என்பது அத்தல வரலாறு. அதனால் குருமலை எனப்பட்டது. சுவாமிநாதன் ஆயினார். சுவாமிக்கு நாதன். தகையா தெனக்கு னடிகாண வைத்த தனியேரகத்தின் முருகோனே:- மாணிக்கவாசகருக்குத் திருக்கழுக்குன்றத்தில் பாத தரிசனங் கிடைத்தது. “உனக்கிலாததோர் வித்துமேல் விளையாமல் என்வினை யொத்தபின் கணக்கிலாத் திருக் கோலநீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே” -திருவாசகம் காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுங் கால் காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணி முக்காற் காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியு நாற் காணியுங் காணியுங் காணியுங் காட்டுங் கழுக்குன்றமே. 20 காணிகால், சிவபெருமான் கால் காட்டியத் திருத்தலம் கழுக்குன்றம். அதுபோல் அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் திருவடிக் காட்டியத் திருத்தலம் சுவாமிமலை. |