“தடைபடாமல் உனது அடிகாண வைத்த தனியேரகம்” என்று இத் திருப்புகழில் பாத தரிசனச் சிறப்பைக் கூறுகின்றார். தருகாவிரிக்கு வடபாரிசத்தில்:- திருவேரகம் என்ற சுவாமிலை, காவிரி நதிக்கு வடபுறத்தில் என்று அருணகிரிநாதர் விளக்கமாகக் கூறியுள்ளார். திருவேரகம், சுவாமிமலை யென்பதை முன் கூறிய இரு திருப்புகழ்ப் பாடல்களில் விளக்கினார். இதில், அது காவிரிக்கு வடபால் என்றுங் கூறினார். திருவேரகம் மலைநாட்டுத் திருப்பதி என்று நச்சினார்க்கினியர் திருமுருகாற்றுப்படை உரையில் கூறியது அருணகிரிநாதருக்கு உடன்பாடு அன்று என வுணர்க. கருத்துரை சிவகுருவே! திருவேரகத் தேவே! நீ மகவாய் வந்து முத்தந் தருவாய். இராவினிருள் போலும் பராவுகுழ லாலும் இராமசர மாகும் விழியாலும் இராகமொழி யாலும் பொறாதமுலை யாலும் இராதஇடை யாலும் இளைஞோர்நெஞ் சராவிஇரு போதும் பராவிவிழ வேவந் தடாதவிலை கூறும் மடவாரன் படாமலடி யேனுஞ் சுவாமியடி தேடும் அநாதி மொழி ஞானந் தருவாயே குராவினிழல் மேவுங் குமாரனென நாளும் குலாவியினி தோதன் பினர்வாழ்வே குணாலமிடு சூரன் பணாமுடிக டோறும் குடாவியிடு வேலங் கெறிவோனே துராலுமிகு தீமுன் பிராதவகை போலும் தொடாமல்வினை யோடும் படிநூறுஞ் |