சுபானமுறு ஞானந் தபோதனர்கள் சேருஞ் சுவாமிமலை வாழும் பெருமாளே பதவுரை குராவின் நிழல் மேவும்-குராமரத்தின் நிழலில் எழுந்தருளியிருக்கும், குமாரன் என நாளும் குலாவி-குமாரக் கடவுளே என்று நாள்தோறும் குலவி, இனிது ஓது அன்பினர் வாழ்வே-இன்புற்று துதி செய்கின்ற அன்பர்களின் வாழ்வே, குணாலம் இடு சூரன்-பகைமையால் கொக்கரித்தச் சூரனுடைய, பணா முடிகள் தோறும் குடாவி இட-பருத்த முடிகள் எல்லாம் தொளைபட்டு வளையுமாறு, வேல் அங்கு எறிவோனே-வேலை அவ்விடத்தில் செலுத்தியவரே! துராலும்-செத்தையானது, மிகு தீ முன்பு இராதவகை போலும்-மிகுந்தெரியும் தீயின் முன்பு இல்லாது எரிந்து போவதுபோல், தொடாமல் வினை ஓடும்படி நூறும்-தம்மை யணுகாது ஓடிப்போம்படி வினைகளைப் பொடிபடச் செய்யும், சுபானம் உறு ஞான தபோதனர்கள் சேரும்-நன்மையை உட்கொள்ளும் ஞானத் தவசீலர்கள் சேர்ந்துள்ள, சுவாமிமலை வாழும்-சுவாமிமலையில் வாழ்கின்ற, பெருமாளே-பெருமையில் மிகுந்தவரே! இராவின் இருள் போலும்-இரவின் இருள் போன்றது என்று, பராவு குழலாலும்-புகழ்கின்ற கூந்தலினாலும், இராமசரம் ஆகும் விழியாலும்-இராமபிரனுடைய அம்பைப் போன்ற கண்களாலும், இராக மொழியாலும்-இசை நிரம்பிய பேச்சினாலும், பொறாத முலையாலும்-சுமை தாங்க முடியாத கொங்கைகளாலும், இராத இடையாலும்-இல்லை என்று கூறுமாறு மிகு நுட்பமான இடையினாலும், இளையோர் நெஞ்சு அராவி- இளைஞர்களுடைய உள்ளத்தை அரம் அறுப்பதுபோல் அறுத்து, இருபோதும்-காலை மாலை என்ற இரு வேளைகளிலும், பராவி விழவே- தம்மைத் துதி செய்து, தளரும்படி, வந்து அடாத விலை கூறும்-எதிரில் வந்து நியாயத்துக்கு மேற்பட்ட விலையைக் கூறுகின்ற, மடவார் அடாமல்- பொதுமாதர்களின் ஆசை என்னைப் பிடியாமல், அடியேனும் சுவாமி அடிதேடும்-அடியேனுக்கும் கடவுளாகிய உமது திருவடியைத்தேடும், அநாதிமொழி ஞானந் தருவாயே-ஆதியில்லாத மொழியான ஞானத்தைத் தந்தருளுவீர். பொழிப்புரை குராமரத்தின் குளிர்ந்த நிழலில் எழுந்தருளியுள்ள குமாரக் கடவுளே என்று தினந்தோறும் குலாவி இனிமையாகத் துதி செய்கின்ற அன்பர்களுக்கு வாழ்வாகத் திகழ்பவரே! வீரவுணர்ச்சியால் கொக்கரிக்கின்ற சூரனுடைய பருத்த முடிகள் யாவும் துளைபட்டு வளையுமாறு வேலை அவ்விடத்தில் விடுத்தவரே! பெருந்தீயின் முன் செத்தை எரிந்து |