பக்கம் எண் :


160 திருவேரகம் (சுவாமிமலை)

குராவினிழல் மேவும் குமாரன்:-

திருவிடைக்கழி என்று ஒரு திருத்தலம் உண்டு. அது திருக்கடவூருக்கு அருகில் இருக்கிறது. அருமையான முருகருடைய தலம். அத்தலத்தில் முருகப் பெருமான் திருக்குரா மரத்தின் கீழ் நின்று அடியவர்க்கு அருள் புரிகின்றார்.

“கொந்துவார் குரவடியினும் அடியவர்
           சிந்தை வாரிச நடுவினும் நெறிபல
   கொண்டவேதநன் முடிவிலும் உறைதரு குருநாதா”
                                               -திருப்புகழ்

“குரவம் உற்றபொற் றிருவிடைக்கழிப் பெருமாளே”
                                     -(பகருமுத்தமிழ்) திருப்புகழ்

மாலுலா மனந்தந் தென்கையிற்சங்கம் வவ்வினான் மலைமகள் மதலை
மோலுலாந் தேவர் குலமுழு தாளுங் குமரவேள் வள்ளிதன் மணாளன்
சேலுலாங் கழனித் திருவிடைக்கழியில் திருக்குரா நீறழ்கீழ் நின்ற
வேலுலாந் தடக்கை வேந்தனென் சேந்தன் என்னுமென் மெல்லியல்
                                                                                                     இவளே - திருவிசைப்பா

குணாலம்:-

குணாலை-வீராவேசத்தால் கொக்கரிப்பது.

துரால்:-

துரால்-துரும்பு. நெருப்பில் துரும்பு எரிந்தொழிவது போல், ஞானிகள் தவாக்கினியால் வினைகளை எரித்துத் துகளாக்குவர்.

சுபானம்:-

சு-நன்மை, பானம்-உட்கொள்ளுதல். நன்மையை உட்கொள்ளுதல்.

தபோதனர்கள் சேரும் சுவாமிமலை:-

நன்மையைக் கொள்ளும் பரம தவசீலர்கள் வாழ்கின்ற புனிதமான திருத்தலம் சுவாமிமலை.

திருவேரகத்தில் முருகனை வழிபடுகின்ற ஆன்றோரைப் பற்றி நக்கீரர் கூறியிருப்பதையும் ஈண்டு சிந்திக்க.