கருத்துரை சுவாமிமலை மேவும் முருகா! திருஞானத்தைத் தந்தருள். கடாவினிடை வீரங் கெடாமலினி தேறுங் கடாவினிக ராகுஞ் சமனாரும் கடாவி விடு தூதன் கெடாதவழி போலுங் கனாவில்விளை யாடுங் கதைபோலும் இடாதுபல தேடுங்கிராதர் பொருள் போலிங் கிராமலுயிர் கோலிங் கிதமாகும் இதாமெனிரு போதுஞ் சதாவின்மொழி யாலின் றியானுமுனை யோதும் படிபாராய் விடாதுநட நாளும் பிடாரியுட னாடும் வியாகரண ஈசன் பெருவாழ்வே விகாரமுறு சூரன் பகாரமுயிர் வாழ்வும் விநாசமுற வேலங் கெறிவோனே தொடாது நெடுதூரந் தடாதுமிக வோடுஞ் சுவாசமது தானைம் புலனோடுஞ் சுபானமுறு ஞான தபோதனர்கள் சேரும் சுவாமிமலை வாழும் பெருமாளே பதவுரை விடாது நடம் நாளும்-எந்நாளும் விட்டுக்கொடுக்காதபடி நடனத்தை, பிடாரி உடன் ஆடும்-காளிதேவியுடன் ஆடுகின்ற, வியாகரண ஈசன்-நாடக இலக்கணத்தை யறிந்த சிவபெருமானுடைய, பெருவாழ்வே-சிறந்த புதல்வரே! விகாரம் உறு சூரன்-மாறுபட்ட குணமுடைய சூரபன்மனுடைய, பகாரம் உயிர் வாழ்வும் விநாசம் உற-அலங்கார வாழ்வு அழியுமாறு, வேல் அங்கு எறிவோனே-அவ்விடத்தில் வேலை விடுத்தவரே! தொடாது-தொட முடியாமல், நெடுதூரம் தடாது மிக ஓடும்-நெடுந்தூரம் வாயுவையும், ஐம்புலனோடும்-ஐம்புலன்களையும், சுபானம் உறு-நல்லபடி உள்ளே அடங்குகின்ற, ஞான தபோதனர்கள் சேரும்-ஞானத் தவசீலர்கள் சேருகின்ற, சுவாமிலை வாழும்-சுவாமிமலையில் எழுந்தருளி யிருக்கின்ற, பெருமாளே- பெருமையிற் சிறந்தவரே! கடாவின் இடை-எருமைக்கடாவின் மீது, வீரம் கெடாமல் இனிது ஏறும்-தனது வீரமானது குன்றாமல் இனிதாக ஏறுகின்றவனும், கடாவின் நிகர் ஆகும்-கடாவைப்போன்ற முரட்டுத்தனமுடையவனுமாகிய, சமனாரும்-இயமன், கடாவி விடு |