தூதன்-தூண்டி விடுத்த தூதன், கெடாத வழி போலும்-தவறாத வழியில் வருவதுபோல் வந்து, கனாவில் விளையாடும் கதை போலும்-கனவில் விளையாடுகின்ற கதைபோலவும், இடாது பல தேடும் கிராதர் பொருள் போல்-அறஞ்செய்யாது பலப்பல தேடிச் சேகரிக்கும் கொடியார் பொருள் போலவும், இங்கு இராமல் உயிர் கோலிங்கு-இங்கு நிலைத்து இராவண்ணம் உயிரைக் கவர்ந்து போகின்ற, இதம் ஆகும் இது ஆம் என-சுகந்தான் இந்த வாழ்க்கை என்றுஉணர்ந்து, இருபோதும்-காலையும் மாலையும், சதா-மற்று எப்போதும்,இன்மொழியால்-இனியமொழிகளால், இன்று யானும் உனை ஓதும்படி பாராய்-இன்று அடியேனும் தேவரீரைஓதும்படி திருக்கண்ணால் பார்த்தருள்வீர். பொழிப்புரை விட்டுக்கொடுக்காது எந்நாளும் காளிதேவியுடன் நடனம் ஆடுகின்ற, நாடக இலக்கணத்தை யுணர்ந்தசிவபிரானுடைய பெரிய வாழ்வே! மாறுபட்ட சூரபன்மனுடைய அலங்காரம் நிறைந்த உயிர்வாழ்க்கைஅழியுமாறு வேலை விடுவித்தவரே! தொட முடியாமல் நீண்டதூரம் தடைபடாது ஓடுகின்ற பிரணவாயுவையும்ஐம்புலன்களையும் யோகநெறியால் உள்ளுக்குள் ஒடுக்குகின்ற ஞானத் தவசீலர்கள் உறைகின்ற சுவாமிமலையில் வாழும் பெருமிதம் உடையவரே! வீரங் குன்றாமல் எருமைக் கடாவின் மீது ஏறுகின்ற அக்கடாவைப் போன்ற முரட்டுக் குணமுடைய இயமன் கட்டளையிட்டு அனுப்பிய தூதர்கள் தவறாத வழியில்வருவதுபோல் வந்து, கனாவில் விளையாடிய கதைபோலவும், அறம் புரியாது பலப் பலவாகத் தேடிய கொடியாருடைய செல்வம் போலவும், இங்கு நிலைத்திராத வண்ணம் உயிரைக் கொண்டு போகும்சுகந்தான் இந்த வாழ்க்கை என்பதை உணர்ந்து, காலையும் மாலையும் மற்றெப்போதும் இனியமொழியால் அடியேனும் தேவரீரை ஓதும்படி திருக்கண்ணால் பார்த்து அருள்புரிவீராக. விரிவுரை கடாவினிடை வீரங் கெடாமல்:- இயமனுடைய வாகனம் எருமைக்கடா. அது மிகவும் கடுங் கொடுந் தீரமுடையது. அது கால்களைப்பெயர்த்து வைக்கும் போது இடி இடிப்பது போன்ற |