பக்கம் எண் :


2 திருவேரகம் (சுவாமிமலை)

திருமாலைகளை, கனமேரு ஒத்திடும்-பொன் மேருமலையை யொத்து விளங்கும், மா பன்னிரு புயத்து அணிந்த-பெருமை தங்கிய பன்னிரண்டு தோள்களிலும் அணிந்து கொண்டுள்ள, கருணை ஆகர-கருணைக்கு உறைவிடமானவரே! ப்ரசண்ட-மிகுந்த வேகமுடையதும், கதிர்-ஞான வொளியை வீசுவதுமாகிய, வேலா-வேற்படையை யுடையவரே! வடிவு ஆர்- சிறந்த அழகு நிரம்பிய, குறத்தி தன்-வள்ளியம்மையாருடைய, பொன் அடிமீது-பொற்பிரகாசம் பொருந்திய திருவடிக் கமலங்களின்மீது, நித்தமும்- நாள்தோறும், தண்முடியானது உற்று உகந்து-குளிர்ந்த மணிமகுடமானது பொருந்த மகிழ்ச்சியுடன், பணிவோனே-பணிபவரே! , வள வாய்மை-வளம் பெற்றவர்க்கும், சொல் ப்ரபந்தம் உள-சொல்லழகு நிரம்பிய நூல்களை யியற்றுவதில் வல்லமையும் உடைய, கீரனுக்கு-நக்கீரதேவருக்கு, உகந்த- மகிழ்ச்சியுற்று, இலக்கணங்கள் இயல்பு-தமிழிலக்கணங்களின் இயல்புகளை, மலர்வாய் ஓதி-மலர் போன்ற திருவாக்கால் ஓதுவித்து, அடி மோனை சொற்கு இணங்க-அடி, மோனை, சொல் என்னும் யாப்புக்கு இணங்குமாறு, உலகம் உவப்ப என்று-உலகம் உவப்ப என்று, உன் அருளால் அளிக்கு- தேவரீர் திருவருளால் அடியெடுத்துத் தந்த, கந்த-கந்தப் பெருமானே! பெரியோனே-பெரியவரே! திற மாதவர்-பொறிபுலனடக்குந் திறமையுடைய பெருந்தவ முனிவர்கள், கனிந்து-மனங்கனிந்து உருகி அன்பு செய்து, உன் இருபாத பத்மம் உய்ந்த-உமது இரண்டு திருவடிக்கமலங்களால் உய்வு பெற்று, திருவேரகத்து அமர்ந்த-சுவாமிமலையில் எழுந்தருளியுள்ள, பெருமாளே-பெருமையின் மிக்கவரே! செடிநேர்-பாவத்திற்கு உறைவிடமாகிய, குடம்பை உடல் தனின்மேவி உற்று-பறவை முட்டைக்கு நிகராகிய உடம்பில் விரும்பி பொருந்தி யுறைந்திருந்து, இடிந்தபடிதான்-அம்முட்டை திடீரென்று உடைந்த படி, இங்கண் அலக்கண் உறலாமோ-இவ்விடத்தில் மரணமாகிய துன்பத்தை அடியேன் அடையலாமோ? (அங்ஙன மடையாவண்ணம்) அடியேன் உரைத்த புன் சொல் அது மீதும்-அடியேன் பாடிய அற்புதமான சொற்களாகிய பாடலின் மீதும், நித்தமும்-நாள்தோறும், தண் அருளே தழைத்து உகந்து வரவேணும்-குளிர்ந்த திருவருள் மணங்கமழச் செய்து மகிழ்ச்சியுடன் வந்தருள்புரிவீர்.

பொழிப்புரை

வாசனை தங்கியதும் பெருமை பொருந்தியதும் மலர்களுக்குள் இன்பத்தைத் தருவதும் தேன் துளிப்பதும் அணிவிப்பதனால் தேவரீரது நட்பைத் தரவல்லதுமாகிய பெரிய கடப்ப மலர்களைத் தொடுத்துச் செய்த திருமாலையை, பொன்மேருமலை போன்ற பன்னிரு புயாசலங்களிலும் தரித்துக் கொண்டுள்ள கருணைக்கு உறைவிடமானவரே! மிக்க வேகத்தை யுடையதும் ஞானப்ரகாசத்தை வீசுவதும் ஆகிய வேலாயுதத்தை