பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 5

கருத்துரை

கடப்ப மாலையை யணிபவரே! கதிர்வேலவரே! குறமகள் கொழுநரே! நக்கீரரையாண்ட நல்லிசைப் புலவரே! சுவாமிமலைத் தலைவரே! உடலை விட்டு நீங்கித் துன்புறா முன், அடியேனுடைய பாடலுக்கிரங்கி வரவேணும்.

2

  விழியால் மருட்டி நின்று முலைதூ சகற்றி மண்டு
                   விரகான லத்த ழுந்த                     நகையாடி
         விலையாக மிக்க செம்பொன் வரவே பரப்பி வஞ்ச
                   விளையாட லுக்கி சைந்து       சிலநாள் மேல்
  பொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட தொந்த
                   முழுமாயை யிற்பி ணங்கள்          வசமாகி
         முடியாது பொற்ச தங்கை தருகீத வெட்சி துன்று
                   முதிராத நற்ப தங்கள்                    தருவாயே
  பொழிகார் முகிற்கி ணைந்த யமராஜ னுட்க அன்று
                   பொருதா ளெடுத்த தந்தை         மகிழ்வோனே
         புருகூத னுட்கு ளிர்ந்த கனகா புரிப்ர சண்ட
                   புனிதா ம்ருகக்க ரும்பு              புணர்மார்பா
   செழுவாரி சக்தி லொன்று முதுவேதன் வெட்க அன்று
                   திருவாய்மை செப்பி நின்ற            முருகோனே
         திரளா மணிக்கு லங்கள் அருணோ தயத்தை வென்ற
                   திருவே ரகத்த மர்ந்த                     பெருமாளே

பதவுரை

பொழி கார் முகிற்கு இணைந்த-பொழிகின்ற கரிய மேகத்துக்கு ஒப்பான, யமராஜன் உட்க-யமதருமராஜன் அஞ்சும்படி, அன்று-அந்நாளில், பொரு தாள் எடுத்த-போர்புரிய வல்ல திருவடியைத் தூக்கிய, தந்தை மகிழ்வோனே-தந்தையாகிய சிவபெருமான் மகிழ்ச்சி கொள்ளும் இறைவனே! புருகூதன் உள் குளிர்ந்த-இந்திரனது உள்ளம் குளிர்ந்த, கனகாபுரி- பொன்னுலகைக் காத்த, ப்ரசண்ட-வல்லமையுடையவரே! புனிதா- தூய்மையானவரே! ம்ருக கரும்பு புணர் மார்பா-மான் ஈன்ற கரும்பு போன்ற வள்ளியைத் தழுவுகின்ற திருமார்பினரே! செழுவாரிசத்தில் ஒன்றும்- செழுமையான தாமரை மலரில் வாழ்கின்ற,