கருத்துரை திருவேரகத்துறையுந் தேவா! திருவடி தந்தருள்வாய். கதிரவனெ ழுந்து லாவு திசையளவு கண்டு மோது கடலளவு கண்டு மாய மருளாலே கணபணபு யங்க ராஜன் முடியளவு கண்டு தாள்கள் கவினற நடந்து தேயும் வகையேபோய் இதமிதமி தென்று நாளு மருகரு கிருந்து கூடு மிடமிடமி சென்று சோர்வு படையாதே இசையொடுபு கழ்ந்த போது நழுவியப்ர சண்டர் வாச லிரவுபகல் சென்று வாடி உழல்வேனோ மதுகரமி டைந்து வேரி தருநறவ முண்டு பூக மலர்வளநி றைந்த பாளை மலரூடே வகைவகையெ ழுந்து சாம வதிமறை வியந்து பாட மதிநிழலி டுஞ்சு வாமி மலைவாழ்வே அதிரவரு சண்ட வாயு வெனவருக ருங்க லாப அணிமயில்வி ரும்பி யேறு மிளையோனே அடைவொடுல கங்கள் யாவுமுதவிநிலை கண்ட பாவை அருள்புதல்வ அண்ட ராஜர் பெருமாளே பதவுரை மதுகரம் மிடைந்து-வண்டுகள் நிறைந்து கூடி, வேரி தரு நறவம் உண்டு- வாசனையுள்ள தேனை யுண்டு, பூக மலர் வளம் நிறைந்த பாளை மலர் ஊடே-கமுக மரத்தில் பூவின் வளப்பம் உள்ள பாளை மலர்களின் இடையே, வகை வகை எழுந்த-வகை வகையான நாதத்துடன் எழுந்த, சாம அதிமறை வியந்து பாட-சாமம் என்ற சிறந்த வேதமோ என்று வியக்குமாறு ஒலிக்க, மதி நிழல் இடும்-சந்திரனைப் போன்ற குளிர்ச்சியைத் தரும், சுவாமி மலை வாழ்வே-சுவாமி மலையில் வாழ்கின்றவரே! அதிர வரு சண்ட வாயு எனவரு -உலகெலாம் அதிர்ச்சியடையும்படி பெரிய வேகமுள்ள காற்றைப் போல் பறந்துவருகின்ற, கரும் கலாப அணி மயில் விரும்பி ஏறும்-நீலத் தோகையால் அழகிய மயிலில் விரும்பி ஏறுகின்ற, இளையோனே- இளையவரே! அடைவோடு உலகங்கள் யாவும் உதவி-முறையாக உலகங்கள் எல்லாவற்றையும் படைத்து, நிலை கண்ட பாவை-அவைகளை நிலைத் திருக்கச் செய்த உமாதேவியார், அருள் புதல்வ-அருளிய புதல்வரே! அண்டராஜர் பெருமாளே-தேவ மன்னர்களின் |