பெருமை மிகுந்தவரே! கதிரவன் எழுந்து உலாவு திசை அளவு கண்டு- சூரியன் உதித்துச் செல்லும் திசைகளின் அளவைச் சென்று கண்டும், மோது கடல் அளவு கண்டு-அலைகள் மோதுகின்ற கடலின் எல்லை அளவைப் போய்க் கண்டும், மாய மருளாலே-உலக மாயை என்னும் மயக்கத்தால், கணபண புயங்க ராஜன் முடி அளவு கண்டும்-கூட்டமான படங்களையுடைய நாகராஜனாகிய ஆதிசேடனுடைய முடி எல்லை அளவைப் போய்க் கண்டும், தாள்கள் கவின் அற நடந்து தேயும் வகையே போய்-அழகு குலைய நடந்து, கால்கள் தேயுமாறு அங்கங்கே போய், இதம் இதம் என்று- இது நல்ல இடம் இது நல்ல இடம் என்று நினைத்து, நாளும் அருகு அருகு இருந்து-உலோபிகளுடைய சமீபத்தில் அணுகி இருந்து, கூடும் இடம் இடம் இது என்று சோர்வு படையாதே-சேர்ந்து அணுகத் தக்க இடம் இதுதான், இடம் இதுதான் என்று எண்ணி தளர்ச்சியடையாமல், இசையோடு புகழ்ந்த போதும்-இசைப் பாட்டுக்களாலும் உரையாலும் அவர்களைப் புகழ்ந்து கூறிய போதும், நழுவிய ப்ரசண்டர்-மெல்ல நழுவிப் போகும் பெரிய ஆட்களாம் அந்த லோபியர்களது, வாசல் இரவு பகல் சென்று வாடி உழல்வேனோ- வீட்டு வாசலை இரவு பகலாகச் சென்று வாடி அடியேன் திரியலாமோ? பொழிப்புரை வண்டுகள் நிறைந்து கூடி வாசனையுள்ள தேனைக் குடித்து, பாக்கு மரத்தில் பூவின் வளப்பம் உள்ள பாளை மலர்களின் இடையே சாமவேத கானம்போல் வகை வகையான ஒலிகளைச் செய்ய, சந்திரனைப்போல் குளிர்ந்துள்ள சுவாமிமலையில் எழுந்தருளியுள்ளவரே! உலகம் அதிரும்படி கடும் வாயு வேகமாக வருகின்ற நீலத்தோகையால் அழகுடைய மயிலில் விரும்பி ஏறுகின்ற இளம் பூரணரே! முறையோடு எல்லாவுலகங்களையும் படைத்து- அவற்றை நிலைபெறச் செய்கின்ற உமாதேவியார் ஈன்ற புதல்வரே! இந்திரர்கள் போற்றும் பெருமிதம் உடையவரே! சூரியன் உதித்துச் செல்லுகின்ற திசைகளின் அளவைச் சென்று கண்டும், அலைகள் மோதுகின்ற கடல் மீது பயணம்போய் அதன் எல்லையைக் கண்டும், உலக மாயையால் மருண்டு, பணாமகுடங்களை உடைய ஆதிசேடன் முடி காணும்படி, பூமி தேயவும் கால்கள் தேயவும் அழகு குலையுமாறு அலைந்து, இது நல்ல இடம் இது நல்ல இடம் என்று நாடோறும் உலோபிகளுடைய அருகில் சேர்ந்து, தக்க |