ஓம் குஹாய நம திருப்புகழ் விரிவுரை குன்றுதோறாடல் கயிலைமலை தேனுந்து முக்கனிகள் பால்செங் கருப்பிளநிர் சீரும்ப ழித்த சிவ மருளூறத் தீதும்பி டித்தவினை யேதும்பொடித்துவிழ சீவன்சி வச்சொரூப மெனதேறி நானென்ப தற்றுயிரொ டூனென்ப தற்றுவெளி நாதம்ப ரப்பிரம வொளிமீதே ஞானஞ்சு ரப்பமகி ழாநந்த சித்தியொடெ நாளுங்க ளிக்கபத மருள்வாயே வானந்த ழைக்காடி யேனுஞ்செ ழிக்கஅயன் மாலும்பி ழைக்க அலை விடமாள வாருங்க ரத்தனெமை யாளுந்த கப்பன்மழு மானின்க ரத்தனருள் முருகோனே தானந்த னத்ததன னாவண்டு சுற்றமிது தானுண்க டப்பமல ரணிமார்பா தானுங்கு றித்துஎமை யாளுந் திருக்கயிலை சாலுங்கு றத்திமகிழ் பெருமாளே. பதவுரை அலைவிடம் மாள=கடலில் தோன்றிய ஆலகால விடத்தின் வலிமை யழிய, வாரும் கரத்தன்=வாரி எடுத்த திருக்கரத்தை யுடையவரும், எமை ஆளும் தகப்பன்=அடியேங்களாகிய எங்களை ஆட்கொள்ளும் பரம பிதாவும், மழு மானின் கரத்தன்=நெருப்பையும் மானையும் ஏந்திய திருக்கரத்தை யுடையவரும் ஆகிய சிவபெருமான், வானம் தழைக்க=விண்ணுலகம் தழைத்து ஓங்கும் பொருட்டும், அடியேனும் செழிக்க=அடியேன் சிவநலம் பெற்று இன்புறுதற் பொருட்டும், அயன் மாலும் பிழைக்க=பிரமதேவரும் நாரயண |