பக்கம் எண் :


10 திருப்புகழ் விரிவுரை

 

வெளுத்த பொருப்பு:-

வெண்மையான மலை. வெள்ளி மலை. திருக்கயிலாயம். இம்மலை கோடி கோடி சூரிய ஒளிபோன்று தகதக என்று விளங்கா நிற்கும்.

அண்ணல் வீற்றிருக்கப் பெற்றதாகலின்
நண்ணு மூன்றுலகும் நான்மறைகளும்
எண்ணில் மாதவம் செய்யவந் தெய்திய
புண்ணியம் திரண்டுள்ளது போல்வது.
                                         -பெரியபுராணம்.

விரித்தசடைக்குளொருத்தியிருக்க ம்ருகத்தை எடுத்தார்:-

உமாதேவியாருடைய விரல்களில் இருந்து தோன்றிய கங்கை உலகங்களை யெல்லாம் அழிக்குமாறு பெருகித் திரண்டு வெள்ளமாய் வந்தபோது சிவபெருமான் அக் கங்கையைத் தமது சடைமுடியில் ஓர் உரோமத்தில் அடக்கி அகில உலகங்கட்கும் அருள் புரிந்தார்.

கங்கையை மலையுறையுங் கந்தவேளே! மாதர் மயக்குறா வண்ணம் அருள் செய்.

3

           பனியின் விந்துளி போலவே கருவினுறு
                     மளவி லங்கொரு சூசமாய் மிளகுதுவா
           பனைதெ னிங்கனி போலவே பலகனியின் வயிறாகிப்
               பருவ முந்தலை கீழதாய் நழுவி நில
                    மருவி ஒன்பது வாசல்சேர் உருவமுள
        பதுமை யின்செயல் போலவே வளிகயிறி         னுடனாடி
           மனவி தந்தெரி யாமலே மலசலமோ
                    டுடல்ந கர்ந்தழு தாறியே அனைமுலையின்
         மயம் யின்றொரு பாலனா யிகமுடைய          செயல்மேவி