வடிவ முன்செய்த தீமையா லெயுமுனையும் அறம றந்தக மீதுபோய் தினதினமு மனம ழிந்துடல் நாறினே னினியுனது கழல்தராய் தனன தந்தன தானனா தனதனன தினன திந்தன தீததோ திகுததிகு தகுத குந்ததி தாகுதோ எனமுழவு வளைபேரி தவில்க நம்பறை காளமோ டிமிலை தொனி யினமு ழங்கெழு வேலைபோ லதிரபொரு சமர்மு கங்களின் மேவிய விருதுசொலு
மவுணோர்கள் சினம ழிந்திட தேர்கள்தோ லரிபரிகள் குருதி யெண்டிசை மூடவே அலகைநரி சிறையி னங்கிளி கூரவே நகையருளி விடும்வேலா சிவன்ம கிழ்ந்தரு ளானைமா முகன்மருவி மனம கிழ்ந்தருள் கூரவோர் கயிலைமகிழ் திகழ்குறிஞ்சியின் மாதுமால்மருவுபுகழ் பெருமாளே. பதவுரை தனன தந்தன தானனா தன தனன தினன திந்தின தீததோ திகு ததிகு தகுத குந்ததி தாகுதோ என=தனன...... தாகுதோ என்ற ஒலிக் குறிப்புடன், முழவு=முரசு வாத்தியமும், வளை=சங்கும் பேரி=பேரி வாத்தியமும், தவில்=தவிலும், கணம்பறை= கூட்டமான பறவைகளும், களமோடு=எக்காளம் என்ற வாத்தியமும், இமிலை தொனி இனம் முழங்கு=இவைகள் ஒலிக்கும் ஒலிவகைகள் முழக்கஞ் செய்து, எழுவேலை போல் அதிர=ஏழு கடல்களைப் போல் பெரிய ஓசையை உண்டாக்க, பொரு சமர் முகங்களில் மேவியே=போர்க்களங்களில் நின்று, விருது சொலும் அவுணோர்கள்=தம் பெருமைகளைக் கூறிக் கொள்கின்ற அசுரர்களின, சினம் அழிந்திட=கோபமானது அழியவும், தேர்கள்=தேர்கள், தோல்=யானை, அரிபரிகள்=வலிமையுடைய குதிரைகளின், குருதி எண்திசை மூடவே=உதிரமானது எட்டுத்திசைகளிலும் பெருகி மறைக்கவும், அலகை=பேய்கள், நரி=நரிகள், சிறை இனம்=பறவைகள், களிகூரவே=மகிழ்ச்சியடையவும், நகை அருளி விடும்வேலோ=புன்னகை பூத்து வேலாயுதத்தை விடுவித்தவரே! சிவன் மகிழ்ந்து அருள்=சிவபெருமான் மகிழ்ந்து அருளிய, ஆனைமாமுகன் மருவி=பெருமையுடைய யானைமுகங் கொண்ட விநாயகர் உடனிருந்து, மனம் மகிழ்ந்து அருள்கூர=திருவுள்ளம் மகிழ்ந்து அருள் பாலிக்க, ஒரு கயிலை மகிழ்=ஒப்பற்ற திருக்கயிலாய மலையில் மகிழ்கின்றவரே! திகழ் குறிஞ்சியின்=சிறந்த மலை நிலத்தில், மாது மால் மருவுபுகழ்= வள்ளி |