நாயகி அன்பு கொள்கின்ற புகழ் மிகுந்த, பெருமாளே=பெருமையின் மிக்கவரே! பனியின் விந்துளிபோலவே=பனிபோலச் சுக்கிலம் துளியளவு, கருவின் உறும் அளவில்=கருவில் சேர்ந்த அளவில், அங்கு ஒரு சூசம் ஆய்=அவ்விடத்தில் ஒரு அறிகுறியாய், மிளகு=மிளகின் அளவாகவும், துவர்=பிறகு பாக்கின் அளவாகவும், பனை=பனம் பழம் அளவாகவும், தென்னங்கனிபோலவே=தேங்காய் போலவும் வளர்ந்து, பலகனியின் வயிறு ஆகி=பலாப்பழம் போல் வயிறு பெருத்து, பருவமும் தலைகீழதாய் நழுவி=பிறக்க வேண்டிய காலம் வந்தவுடன் தலைகீழாக நழுவி, நிலமருவி ஒன்பது வாசல் சேர் உருவம் உள=பூமியில் பிறந்து ஒன்பது வழிகள் கொண்ட உருவமுள்ள, பதுமையின் செயல் போலவே=ஒரு பொம்மையைப் போல் கிடந்து, வளிகயிறின் உடன் ஆடி=பிராணவாயு என்ற கயிற்றின் உதவியால் ஆடி, மன=(மன்ன) இப்பூமியில் பொருந்தியிருக்க, விதம் தெரியாமலே மல சலமொடு உடல் நகர்ந்து=உடம்புடன் தவழ்ந்து, அழுது ஆறியே=அழுதும் அழுகை ஓய்ந்தும், அனை முலையின் மயம் அயின்று=தாயின் முலை மயமாகிய பாலைப்பருகி, ஒரு பாலனாய்=ஒரு பாலகனாய், இகமுடைய செயல்மேவி=இப்பிறப்பிற் செய்ய வேண்டிய செயல்களச் செய்து, வடிவம் முன் செய்த தீமையால் எயும்=இந்த வுருவம் முற்பிறப்பிற் செய்த தீமை காரணமாகப் பொருந்தும், உனையும் அற மறந்து=தேவரீரையும் அறவே மறந்து, அக மீது போய்=பாவம் மேலும் மேலும் வளர, தின தினமும் மனம் அழிந்து=நாள்தோறும் மனம் உடைந்து வழிபட்டு, உடல் நாறினேன்=உடம்பு நிலை குலைந்து கெடுகின்றேன், இனி உனது கழல் தாராய்=இனி உமது திருவடியைத் தந்தருள்வீராக. பொழிப்புரை தனன தந்தன தானனா தனதனன தினன திந்தின தீததோ திகுத திகு தகுத குந்ததி தாகுதோ என்ற ஒலிகளை உண்டாக்கி, முரசு, சங்கு, பேரி, தவில், பறைகள், எக்காளம், திமிலை முதலிய வாத்தியங்கள் ஏழு கடல்களைப்போல் ஒலிக்க, போர்க் களத்தில் வந்து தற்பெருமை கூறிய அசுரர்களின் கோபம் அழியவும், யானை வலிய குதிரைகளின் உதிரமானது எண் திசைகளையும் மூடவும், பேய்கள் நரிகள் பறவைகள் களிப்புறவும், புன்னகை புரிந்து வேலாயுதத்தை விடுத்தருளியவரே! சிவபிரான் மகிழ்கின்ற, விநாயகப் பெருமான் உடன் இருந்து மகிழ்ந்து அருள்பாலிக்க, ஒப்பற்ற கயிலைமலையில் மகிழும் பெருமிதமுடையவரே! அழகிய குறிஞ்சி நிலத்தில் வாழும் வள்ளியம்மையின் மீது காதல் கொள்ளும் புகழ் வாய்ந்த பெருமிதம் உடையவரே! பனியின் துளிபோன்ற விந்துவானது கருவில் உற்று, பாக்கு, பனம்பழம், தேங்காய் போல் |