பனித்துளி போன்ற விந்து எனக்கொண்டு கூட்டிப் பொருள் செய்க. கருவிலுறுமளவில் அங்கொரு சூசமாய்:- உயிர் விந்தின் மூலம் கருவில் உற்றபின் அக் கருப்பைக்குள் வளர்ச்சி பெறுகின்றது. சூசம்-சூசகம், அறிகுறி. கருவின் அறிகுறியாய்த் தாயின் உடம்பில் பச்சை நரம்பு தோன்றுதல். தனத்தின் கண் கருமையுறுதல் முதலியன உண்டாகும். மிளகு துவர் பனை தெனங்கனிபோலவே:- கருவானது மிளகின் அளவாகவும், பாக்கின் அளவாகவும், பனம்பழத்தின் அளவாகவும், தேங்காயின் அளவாகவும் வளர்ச்சி யுற்றுப் பருத்து நிற்கும். பலகனியின் வயிறாகி:- தாயின் கருவுற்ற வயிறு பலாப்பழம்போல் காட்சியளிக்கும். பருவமுந் தலை கீழதாய் நழுவி:- தாயின் உதரத்தில் இருந்த குழவி ப்ரசூதவாயு பிடர் பிடித்து உந்த, தலைகீழாய் திரும்பி வந்து பிறக்கும். நிலமறுவி:- பூமியில் வந்து சேரும். அப்போது அளவற்ற வேதனையுற்ற அக்குழவி அழுது துன்புறும். ஒன்பது வாசல்சேர் உருவமுள பதுமையின் செயல்போல்:- ஒரு பதுமைக்கு ஒன்பது துவாரம் அமைத்தது போன்ற உருவம் பெற்று அக்குழவி காட்சியளிக்கும். வளிகயிறினுடனாடி மன:- கயிறுகளைக் கட்டியாட்டும் பொம்மலாட்டம் போன்றது மனித வாழ்வு. மரப்பொம்மைக்கு நிரம்பக் கயிறுகளைக் கட்டி அசைத்து ஆட்டுமாப்போல், இந்த மாமிசப் பொம்மைக்கும் பிராணவாயு என்ற கயிற்றைக் கட்டி வைத்துள்ளது. அதனால் ஆட்டமடைந்து நிலவுலகில் பொருந்தி வாழ்கின்றது. மன்ன என்ற சொல் மன என்று வந்தது. விதந்தெரியாமலே மலசலமொ டுடல் நகர்ந்து:- இன்னபடி போகின்றது என்ற விவரம் தெரியாமலேயே மலமும் சலமும் வெளிப்பட, அவற்றுடன் மெல்ல நகர்ந்து அக் |