மருவி மனமகிழ்ந்தருள் கூர:- விநாயகர் முருகரிடம் அமர்ந்து மிக்க அன்புடன் தழுவி மகிழ்கின்றார். முருகவேள் அருள் புரிகின்றார். கருத்துரை திருக்கயிலை மேவும் சிவகுமாரா! உன் திருவடி தருவாய். புமியதனிற் ப்ரபுவான
புகலியில்வித்
தகர்போல் அமிர்தகவித் தொடைபாட அடிமைதனக் கருள்வாயே சமரிலெதிர்த் தசுர்மாளத் தனியயில்விட் டருள்வோனே
நமசிவயப் பொருளோனே ரசதகிரிப் பெருமாளே. பதவுரை சமரில் எதிர்த்த=போர்க்களத்தில் எதிர்த்து வந்த, சூர்மாள=சூரபன்மன் மாண்டொழிய, தனி அயில்=ஒப்பற்ற வேற்படையை, விட்டு அருள்வோனே=ஏவி அருளியவரே! நமசிவாய பொருளோனே=”நமசிவய” என்ற தூல ஐந்தெழுத்தின் மெய்ப்பொருளாக விளங்குபவரே! ரசதகிரி=வெள்ளி மலையாகிய திருக்கயிலை மலையில் எழுந்தருளியுள்ள, பெருமாளே=பெருமையின் மிக்கவரே! புமி அதனில்=இப் பூமண்டலத்தில், ப்ரபு ஆன=தனிப் பெருந்தலைவராக விளங்குபவரும், புகலியில் வித்தகர் போல=சீர்காழிப் பகுதியில் திருவவதாரஞ் செய்தவருமாகிய ஞானசம்பந்தப் பெருமானைப் போல், அமிர்த கவி தொடை பாட=இறப்பை நீக்கி மரணமிலாவாழ்வினை வழங்கும் தேவாரப் பாடலைப் போல் அடியேனும் பாடுமாறு, அடிமை தனக்கு=தேவரீருடைய அடிமையாகிய நாயேனுக்கு, அருள்வாயே=திருவருள் புரிவீர். பொழிப்புரை போர்த்தலத்தில் எதிர்த்து வந்த சூரபன்மன் மாயுமாறு இணையில்லாத ஞானசக்தியை விடுத்தருளிய விமலரே! “நமசிவய” என்ற பஞ்சாக்கரத்தின் உட்பொருளாக விளங்குபவரே! வெள்ளியங்கிரியில் எம்மை உய்விக்கும் பொருட்டு எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே! பூமண்டலத்தின் தனிப் |