பக்கம் எண் :


2 திருப்புகழ் விரிவுரை

 

மூர்த்தியும் சூரபன்மனால் அழியாது உய்யும் பொருட்டும், அருள்=பெற் றருளிய, முருகோனே=முருகக் கடவுளே! தானந்தனத்த தனனா= தானந் தனத்த தனனா என்று ரீங்காரஞ் செய்து, வண்டு சுற்றி=வண்டானது வட்டமிட்டு, மதுதான் உண்=தேனைப் பருகின்ற, கடப்ப மலர்=கடப்ப மலரை, அணி மார்பா=தரித்துக்கொள்ளுகின்ற திருமார்பை யுடையவரே! எமை ஆளும்=அடியேங்களை ஆட்கொள்ளுகின்ற, தானம் குறித்து=இடமாகக் குறித்து, திருக்கயிலைசாலும்=தெய்விகமுள்ள கயிலை மலைமேல் எழுந்தருளியுள்ள, குறத்தி மகிழ்=வள்ளி நாயகியார் உவக்கின்ற, பெருமாளே=பெருமையின் மிக்கவரே! தேன்=நல்ல தேன், உந்து முக்கனிகள்=உயர்ந்த மா பலா வாழை என்ற மூவகைப்பட்ட பழங்கள், பால்=ஆவின் பால், செம் கருப்பு=சிவந்த கரும்பு, இளநிர்=இளநீர், சீரும்=இவைகளின் இனிமைகளின் சிறப்பையும், பழித்த=தனது ஒப்புயர்வற்ற தனிப்பெரும் இனிமையால் தாழ்மைப் படுத்துகின்ற, சிவம் அருள் ஊற=மேலான சிவத்தின் திருவருள் ஊற்றெடுத்துப் பெருகவும், தீது பிடித்தவினை ஏதும்=நன்மையோடு தீமையும் கலந்த வினைகள் முழுவதும், பொடித்து விழ=தூள்பட்டு ஒழியவும், சீவன் சிவசொருபம் என தேறி=இந்த ஜீவன் சிவவடிவாக விளங்குகின்றது என்பதைத் தெளிந்தும், நான் என்பது அற்று=அகங்காரத்தை யொழித்தும், உயிர் ஓடு ஊன் என்பது அற்று=உயிர்ப்பற்று உடற்பற்று என்ற இரண்டையும் ஒழித்தும், வெளி நாதம் பரப்பிரமம் ஒளிமீது=பரவெளியிலுள்ள அருள் நாதத்தோடு கூடிய பரஞ்சோதியில், ஞானம் சுரப்ப=சிவஞானம் பெருகி வரவும், மகிழ் ஆனந்த சித்தி ஓடு=உள்ளத்திலும் உணர்விலும் தித்திக்கின்ற சிவானந்த மோட்சத்தில், நாளும் களிக்க=அடியேன் எந்நாளும் மகிழ்ந்திருக்குமாறு, பதம் அருள்வாயே=தேவரீருடைய திருவடியைத் தந்தருள்வீர்.

பொழிப்புரை

கடலில் தோன்றிய ஆலாலவிடத்தின் கொடிய வலிமை கெட அதனை வாரியெடுத்த திருக்கரத்தை யுடையவரும், அடியேங்களை யாட்கொள்ளும் பரமபிதாவும், மழுவையும் மானையும் ஏந்திய திருக்கரத்தினருமாகிய சிவபெருமான், பொன்னுலகம் செழிப்புற்று ஓங்குமாறும், அடியேன் உய்ந்து ஈடேறுமாறும், மாலயனாதி வானவர் மாயாமல் பிழைக்குமாறும் பெற்றருளிய முருகக் கடவுளே! “தானந்த னத்த தனனா” என்று ஒலிசெய்து வண்டுகள் வட்டமிட்டுத் தேனைப் பருகுகின்ற கடப்ப மலர்மாலையைத் தரித்துக் கொண்டிருக்கின்ற அழகிய திருமார்பை யுடையவரே! அடியேங்களை ஆட்கொள்வதற்கு தக்க இடமாகக் குறித்து திருக்கயிலாயமலையின் மீது எழுந்தருளியுள்ள வள்ளிநாயகியார் மகிழ்கின்ற பெருமிதமுடையவரே! சிறந்த தேன், உயர்ந்த மா, பலா, கதலி என்ற