கருத்துரை சூரையட்ட வேலாயுதரே! நமசிவயப் பொருளாயுள்ளவரே! திருக்கயிலை மலையில் எழுந்தருளியவரே! திருஞானசம்பந்தரைப் போல் அமிர்தகவியைப் பாட அருள்புரிவீர். முகத்தைப் பிலுக்கி மெத்த மினுக்கித் தொடைத்து ரத்ன முலைக்கச் சவிழ்த்த சைத்து முசியாதே முழுக்கக் கழப்பி யெத்தி மழுப்பிப் பொருட்ப றித்து
மொழிக்குட் படுத்த ழைத்த மளிமீதே நகைத்திட் டழுத்தி முத்த மளித்துக் களித்து மெத்த
நயத்திற் கழுத்தி றுக்கி யணைவார்பால் நடுக்குற் றவர்க்கு மெத்த மனத்தைப் பெருக்க வைத்து நயத்துத் தியக்கி நித்த மழிவேனோ செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க திமித்தித் திமித்தி தித்தி யெனாஆடும் செகத்துக் கொருத்தர் புத்ர நினைத்துத் துதித்த பத்த ஜெனத்துக் கினத்த சித்தி யருள்வோனே மிசைத்துத் திடத்தொடுற்று அசைத்துப்பொறுத்தரக்கன் மிகுத்துப் பெர்த்தெ டுத்த கயிலாய மிசைக்குற் றடுத்து மற்ற பொருப்பைப்பொடித்திடித்து மிதித்துத் துகைத்து விட்ட பெருமாளே. பதவுரை செகக்கச் செகக்க செக்க தரிக்கத் தரிக்க தக்க திமித்தித் திமித்தி தித்தி என=செகக்க....தித்தி என்றவண்ணம் ஒலியுண்டாகுமாறு, ஆடும்=திருநடனம் புரிகின்ற, செகத்துக்கு ஒருத்தர் புத்ர=உலகில் ஒப்பற்றவராய் விளங்கும் சிவபெருமானுடைய குமாரரே! நினைத்து துதித்த=ஒருமைப்பட்ட உள்ளத்துடன் நினைத்துத் துதி செய்கின்ற, பத்த ஜெனத்துக்கு=அன்பர்களின் திருக்கூட்டத்துக்கு, இனித்த சித்தி அருள்வோனே= இனிய திருவருட்பேற்றை அருள்புரிபவரே! மிசைத்து=மேற்சென்று, திடத்தொடு உற்று= உறுதியுடன் நெருங்கி, அசைத்து பொறுத்து=அசைத்து பாரத்தைத் தாங்கி, அரக்கன்= இராவனன், மிகுந்து பெயர்த்து எடுத்த=நான் என்ற அகந்தை அதிகரித்து பேர்த்து எடுத்த, கயிலாயமிசைக்கு உற்று=திருக்கயிலாய மலைமீது எழுந்தருளியிருந்து, அடுத்து மற்ற பொருப்பை=அதன் அருகில் இருந்த கிரவுஞ்சம் என்ற மலையை, பொடித்து இடித்து=பொடியாகும்படி இடித்து, மிதித்து |