பரிபுர கழலெட் டாசை செவிடுகள் படமுத் தேவர் பழமறை பணியச்சூல மழுமானும் பரிவொடு சுழலச் சேடன் முடிநெறு நெறனக் கோவு பரியினை மலர்விட் டாடி அடியோர்கள் அரஹர வுருகிச் சேசெ யென திருநடனக்கோல மருள்செயு முமையிற் பாக ரருள்பாலா அலரணி குழல்பொற் பாவை திருமக ளமளிப் போரொ டடியவர் கயிலைக் கான பெருமாளே. பதவுரை பரிபுர கழல்=திருவடியில் உள்ள சிலம்பின் ஓசையும் வீரக்கழலின் ஒலியும், எட்டு ஆசை செவிடுகள் பட=எட்டுத் திசைகளும் செவிடு படவும், முத்தேவர்=பிரமன், திருமால், உருத்திரன் என்ற மூன்று மூர்த்திகளும், பழமறை பணியா=பழமையான வேதங்களும் பணிந்து போற்றவும், சூல மழு மானும் பரிவொடு சுழல=சூலமும் மழுவும் மானும் அன்புடன் சுழலவும், சேடன் முடி நெறு நெறு என=ஆதிசேடனுடைய பணாமகுடங்கள் நெறு நெறு என்று முறியவும், கோவு பரியினை மலர் விட்டு ஆடி= பசுவாகிய வாகனத்தில் திருவடி மலரை வைத்திருத்தலை விடுத்து நடனஞ் செய்து, அடியோர்கள்=அடியவர்கள், அரஹர உருகிசேசெய என=அர அர என்று கூறியும் உள்ளம் உருகியும் ஜெய ஜெய என்று போற்றி செய்ய, திருநடன கோலம் அருள் செய்யும்=திருநடனக் காட்சியை அருளிச் செய்து, உமையின் பாகர் அருள் பாலா= பார்வதி பாகராம் பரமசிவன் அருளிய திருக்குமாரரே! அலர் அணி குழல் பொன் பாவை=மலரை முடிந்த கூந்தலையுடைய அழகிய பாவையும், திருமகள்=திருவின் (இலக்குமியின்) மகளுமாகிய வள்ளிநாயகியின், அமளிபோரொடு=படுக்கையின் போருக்கும், அடியவர்=அடியவரிடத்தும், கயிலைக்கு ஆன=கயிலை மலையிடத்தும் விருப்பங் காட்டும், பெருமாளே=பெருமையிற் சிறந்தவரே! திருநிலம் மருவி=ஒளி வீசும் மேலைப் பெரு வெளியிடத்தை யடைந்து, காலின் இரு வழி அடைபட்டு ஓடி= பிராணவாயு செல்லும்படியான இடைகலை பிங்கலை என்ற வழிகள் அடைபடும்படி ஓட்டி, சிவ வழியுடன் உற்று=சிவநெறியில் நிலைத்து நின்று, ஏகபரம் மீதே=தனித்து நிற்கும் அம் மேலிடத்தே, சிவசுடர் அதனை=சிவ சோதியை, பாவை மணம் என மருவி=பாவைக் கலியாணம் போல கூடி, கோல திரிபுரம் எரிஉஅ தீயின் நகை மேவி=அழகிய ஆணவம் கம்மம் மாயை என்ற மும்மலங்களும் எரியுமாறு தீயைக் கக்கும்படி புன்னகை புரிந்து, இருவினை பொரிய=நல்வினை தீவினை என்ற இருவினைகளும் பொரிந்து சாம்பராகுமாறு, கோல திருவருள் உருவத்து ஏகி=அழகிய உமது திருவருளாம் வடிவில் ஈடுபட்டு, இருள் கதிர் இலி பொன் பூமி தவசுஊடே= இருளும் ஒளியும் இல்லாத அழகிய இடமாகிய தவத்தின் நெறியில், இருவரும் உருகி= தேவரீரும் அடியேனும் குழைந்து ஒன்றுபட்டு, காயம் நிலை என மருவி= |