பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 29

 

அவ்வாறு ஒன்றுபட்ட அருளுருவம் நிலையாகப் பொருந்தி, தேவர் இளையவன் என வித்தாரம் அருள்வாயே=தேவர்கள் அடியேனை இவன் இளையோன் என்று வியந்து கூறுமாறு விசித்திரமான பெரும் பேற்றினை அருள்வீராக.

பொழிப்புரை

திருவடியில் விளங்கும் சிலம்பும் வீரக்கழலும், எட்டுத் திசைகளும் செவிடுபடுமாறு ஒலி செய்யவும், அயன், அரி, அரன் என்ற மும்மூர்த்திகளும் பழமையான வேதங்களும் பணிந்து போற்றவும், சூலமும் மழுவும் மானும் அன்போடு சுழலவும், ஆதிசேடனுடைய பணாமகுடங்கள் நெறு நெறு என்று முறியுமாறும், பசுவாகிய வாகனத்தை விடுத்து நடனம் புரிந்து அடியார்கள் அரஹர செய செய என்று கூறி ஒலிக்கவும், திருநடனக் கோலத்தை அருள் செய்த உமையொருபாகராம் சிவபிரானுடைய புதல்வரே! மலர் முடித்த அழகிய பாவைபோன்ற இலக்குமியி்ன் மகளாகிய வள்ளி பிராட்டியின் படுக்கையின் இன்ப ஆடலிலும் அடியாரிடத்தும் திருக்கயிலாய மலையிலும் அன்பு கொண்ட பெருமிதம் உடையவரே! ஒளி நிலத்தை யடைந்து இடா பிங்கலா எனற இரு நாடிகளின் வழியே செல்லும் பிராணவாயுவை மாற்றி சிவநெறியில் நின்று, தனிமையான மேலிடத்தில் நின்று, சிவ சோதியை பாவை மணம்போல் அடைந்து, மும்மலங்கள் எரியுமாறு நெருப்பெழ நகைபுரிந்து, நல்வினை, தீவினைகளை எரித்துச் சாம்பராக்கி, அழகிய உமது திருவருளாம் உருவில் ஒன்றுபட்டு இருளும் ஒளியும் இல்லாத அழகிய இடத்தில் தவநெறியில் சென்று, தேவரீரும் அடியேனும் குழைந்து ஒன்றாகி, அத்தூய வடிவு நிலைத்து நிற்க அத்துவிதமுற்று, தேவர்கள் இவன் இளையோன் என்று புகழுமாறு விசித்திரமான தெய்வீகத்தை அருள்புரிவீர்.

விரிவுரை

திருநில மருவி :-

திரு-ஒளி. ஞான ஒளி வீசுகின்ற மேருவெளியில் ஏறி நிற்றல்.

“சுடர் பட்டி மண்டபமொ டாடி”         (கட்டிமுண்ட) திருப்புகழ்,

காலி னிருவழி யடைபட் டோடி:-

கால்--பிராணவாயு. பிராணவாயு இடை, பிங்கலை என்ற இரு நாடிகள் வழியே சென்று மீளுகின்றது. அங்ஙனஞ் செல்லவிடாமல் அந்த இரு வழிகளை அடைத்துவிட்டால், அவ்வாயு இரு நாடிகட்கும் இடையேயுள்ள வெண்மையாகவும் தாமரை.