பக்கம் எண் :


30 திருப்புகழ் விரிவுரை

 

நூல்போல் மென்மையாகவும் உள்ள சுழுமுனை நாடி வழி சென்று மேலைப் பெருவெளியை யடையும்.

சிவ வழியுடனுற்று:-

சிவயோக நெறியையடைந்து மூச்சைப் பிடித்துத் துருத்தி போல் கும்பித்து நிறுத்திச் செய்வது அடயோகம்.

திருவருள் தியானத்தினால் பிராணன் தானே அடங்கச் செய்வது சிவயோகம்.

       “அனித்த மான ஊனாளு மிருப்பதாகவே நாசி
                அடைத்து வாயு வோடாத             வகைசாதித்
      தவத்திலே குவால்மூலி புசித்து வாடு மாயாச
                அசட்டுயோகி யாகாமல்                 மலமாயை
         செனித்த காரி யோபாதி ஒழித்த ஞான ஆசார
                சிரத்தையாகி யான்வேறென்            உடல்வேறு
         செகத்தியாவும் வேறாக நிகழ்ச்சியா மனோதீத
                சிவச் சொரூப மாயோகி                 என ஆள்வாய்”
                                                         -திருப்புகழ்ஏகபரமீதே:-

ஏகம்-தனி; பரம்-மேல், கருவி கரணங்கள் யாவுங் கழன்று, முப்பத்தாறு தத்துவங்களையுங் கடந்து அப்பாலைக் கப்பாலாயுள்ள ஏகாந்தமான மேலிடத்தே ஆன்மா நிற்றல்.

“தன்னந்தனி நின்றது தானறிய
   இன்னம் ஒருவர்க் கிசைவிப்பதுவோ?           -அநுபூதி

“ஏகாந்தமான பெரு வெளியானது”                   -அருட்பா

“ஏகாந்த சுகந்தரு பாசாங்குச சுந்தரி” -தேவேந்திரசங்கவகுப்பு

வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியை”
                                                      -அலங்காரம்

சிவசுடரதனை:-

ஏகாந்தப் பெருவெளியில் தானே தனித்து நின்று விளங்கும் சுயஞ்சோதியைக் காணுதல்

“தழைந்த சிவசுடர் தனை என மனதினில்
   அழுந்த வுரை செய வருமுக நகையொபளி
   தழைந்த நயனமும் இருனலர் சரணமும் மறவேளே”
                                            --(குரம்பை) திருப்புகழ்.