கோல திருவரு ளுருவத்தேகி:- இறைவனுக்கு நம்போல் என்பு, தோல், நரம்பு, இவைகளால் ஆன உடம்பு அல்ல. ஆன்மாக்களுக்கு அருளும் பொருட்டு திருவருளே திருமேனியாகக் கொள்கின்றான. அத்தகைய அழகிய திருவருளுருவில் ஒன்று பட்டு நிற்றல். அப்புடன் உப்பு ஒன்றாதல் போல. இருள் கதரிலி போபூமி தவசூடே:- ஆறாதாரத்திற்குமேல் உள்ள சகஸ்ராரத்தில் சூரியனும் சந்திரனும் இன்றி, இருளும் பிறவற்றால் வரும் ஒளியும் இன்றி சுயம்பிரகாசமாய் விளங்கும், “ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரிலாத நாடண்டி” -திருப்புகழ். இருவரு முருகி:- ஆன்மாவும் பரமான்மாவும் குழைந்து ஒன்றுடன் ஒன்று பிரிவறக் குழைந்து ஒன்றாகி நிற்கும் நிலை. இறைவனை நினைக்கின்ற போது உள்ளம் உருகும் உணர்வு உருகும். இதற்கு மேற்பட்ட நிலை என்பு உருகும். அன்புள் ளுருகி அழுவன் அரற்றுவன் என்பும் உருக இராப்பகல் ற்த்துவன் என்பொன் மணியை இறைவனை ஈசனைத் தின்பன் கடிப்பன் திருத்துவந்தானே. -திருமந்திரம். இதற்கு மேற்பட்ட நிலையை உயிர் உருகுவது. உயிருக்குயிராய் இறைவன் விளங்குகின்றான். தங்கத்தின்மீது இரத்தின மணி இருக்கின்றது. தங்கம் உருகியவுடன் அதில் இருந்த மணி அத் தங்கத்தில் பதிந்து விடுகின்றது. அது போல உயிர் உருகியவுடன் உயிருக்குயிராயிருந்த சிவம் உயிருடன் ஒன்றி விடுகின்றது. “சீவனெனச் சிவனென்ன வேறில்லை” -திருமந்திரம். காய நிலையென மருவி:- அவ்வாறு ஒன்றிய அத்திருவருள் நிலை என்றும் அழியாது ஒன்று போல் இருக்கும். தேவர் இளையவன் என:- என்றும் இளையோனாம் முருகனுடன் ஒன்றி யான். |