எட்டு நாற்கரவொருத்தல்:- ஒருத்தல்-யானை. அஷ்ட கஜங்கள்; கிழக்கு முதல் முறையே, ஐராவதம், புண்டரீகம், வாமனம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபௌமம், சுப்ரதீபம். இந்த யானைகட்கு முறையே பெண்யானைகள் அப்பிரமை, கபிலை, பிங்களை, அநுபமை, தாமிரபருணி, அஞ்சனை, அஞ்சனாவதி. திகிரி எட்டுமாக் குலைய:- திகிரி-மலை கயிலை, இமயம், மந்தரம், விந்தம், ஏமகூடம், நீலகிரி, கந்தமாதனம் என்பன அஷ்டமலைகள். எத்தினார்க் கெளியன்:- மூவர்க்கும் தேவர்க்கும் அரியனாம் பரமன், அடியார்க்கு மிக எளியனாய் அருள் புரிவான். அத்தாவுன் னடியேனை அன்பால் ஆர்த்தாய் அருள் நோக்கில் தீர்த்தநீர் ஆட்டிக் கொண்டாய் எத்தனையும் அரிய நீ எளியை யானாய் எனையாண்டு கொண்டிரங்கி ஏன்று கொண்டாய் பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனகள் எத்தனையும் பொறுத்தாயன்றோ இத்தனையும் எம்பரமோ ஐய! ஐயோ! எம்பெருமான் திருக்கருணை யிருந்தவாறே. -அப்பர். முருகன் தமிழ்ப்பாடல்கள் கேட்டு அருள்புரியும் கருணாமூர்த்தி, என்பதை அடியில் வரும் திருப்புகழால் அறிக. “கருணையை தமிழ்ப் பாடல் கேட்டருள் பெருமானே”
(அளிகழல்) திருப்புகழ். கருத்துரை திருத்தணி முருகவேளே! உனது திருவடியை உயிர் நீங்குமுன் தந்தருள். சினத்தி லத்தினை சிறுமண லளவுடல் செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர் செனித்த தெத்தனை திரள்கய லெனபல வதுபோதா செமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை செழித்த தெத்தனை சிறுதன மயல்கொடு செடத்தி தெத்தனை நமனுயிர் பறிகொள்வ தளவேதோ |