கருத்துரை திருக்கயிலை மேவுந் திருமுருகா! சிவாத்துவிதப் பெருவாழ்வைத் தந்தருள்வாய். ஸ்ரீ சைலம் ஒருபது மிருபது மறுபது முடனறு முணர்வுற இருபத முளநாடி உருகிட முழுமதி தழலென வொளிதிகழ் வெலியொடு வொளிபெற விரவாதே தெருவினில் மரமென எவரொடு முரைசெய்து திரிதொழி லவமது புரியாதே திருமகள் மருவிய திரள்புய அறுமுக தெரிசனை பெற அருள் புரிவாயே பரிவுட நழகிய பழமொடு கடலைகள் பயறொடு சிலவகை பணியாரம் பருகிடு பெருவயி றுடையவர் பழமொழி எழுதிய கணபதி யிளையோனே பெருமலை யுருவிட அடியவ ருருகிட பிணிகெட அருள் தரு குமரேசா பிடியொடு களிறுகள் நடையிட கலைதிறள் பிணையமர் திருமலை பெருமாளே. பதவுரை பரிவுடன் அழகிய பழமொடு=அன்போடு நல்ல பழங்களுடன், கடலைகள்= கடலை வகைகள், பயறொடு=பயறுடனே, சில பணியாரம்=சிலவகைப்பட்ட பணியாரங்கள் முதலியவைகளை, பருகிடு=உண்ணுகின்ற, பெறுவயிறு உடையவர்=பெறு வயிற்றினை யுடையவரும், பழமொழி எழுதிய=பழமையான மொழியாகிய மகாபரதத்தை மேருமலையில் எழுதியருளிய, கணபதி இளையோனே=விநாயகப் பெருமானுக்குத் தம்பியே! பெருமலை உருவிட=பெரிய கிரவுஞ்சமலையை ஊடுருவவும், அடியவர் உருகிட=அடியார்கள் உள்ளம் உருகவும், பிணிகெட அருள்தரு=அடியார்களின் பிறவி நோய் தொலையவும் திருவருள் புரிகின்ற, குமரஈசா=குமாரக் கடவுளே! பிடியொடு களிறுகள் நடைஇட=பெண் யானைகளுடன் ஆண் யானைகள் உலாவவும், கலை திரள்= கலைமான்களின் கூட்டம், பிணை அமர்=பெண்மான்களுடன் விரும்புகின்ற, திருமலை=திருப்பருப்பதத்தில் எழுந்தருளியுள்ள, |