பக்கம் எண் :


340 திருப்புகழ் விரிவுரை

 

      மனத்தி லெத்தனை நினைகவ டுகள் குடி
           கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர்
           வதைத்த தெத்தனை யளவிலை விதிகர மொழியாமல்
      வகுத்த தெத்தனை மசகனைமு ருடனை
           மடைக்கு லத்தனை மதியழி விரகனை
           மலர்ப்ப தத்தினி லுருகவு மினியருள்            புரிவாயே
      தனத்த னத்தன தனதன தனதன
           திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி
           தகுத்த குத்தகு தகுதகு தகுதகு                    தகுதீதோ
      தரித்த ரித்தரி தரிரிரி ரிரிரிரி
           தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடுடுடு
           தமித்த மத்தள தமருக விருதொலி            கடல்போலச்
      சினத்த மர்க்கள செருதிகழ் குருதிய
          திமிழ்த்தி டக்கரி யசுரர்கள் பரிசிலை
           தெறித்தி டக்கழு நரிதின நிணமிசை      பொரும்வேலா
      செழிக்கு முத்தம சிவசர ணர்கள்தவ
           முநிக்க ணத்தவர் மதுமலர் கொடுபணி
           திருத்த ணிப்பதி மருவிய குறமகள்            பெருமாளே.

பதவுரை

தனத்தனத்தன-தமித்த=தனத்தன-தமித்த என்ற தாள ஒலிக் குறிப்புடன், மத்தள= மத்தளமும், தமருக=உடுக்கையும், விருது ஒலி கடல் போல=வெற்றிச் சின்னங்களும் கடல்போல் முழங்க, சினந்து அமர் களம்=கோபமிக்க போர்க்களத்தில், செரு திகழ்= போர்மிகுதியாக (அதனால்), குருதிஅது இழந்திட=உதிரம் பெருகித் தோய்ந்திடவும், கரி= யானைப் படைகளும், அசுரர்கள்=இராக்கதர்களும், பரி=குதிரைப் படைகளும், சிலை=வில் முதலிய ஆயுதங்களும், தெறித்திட=பிளவுபட்டு அழியவும், நிண மிசை=மாமிச உணவை, கழு நரி தி(ன்)ன=கழுகளும் நரிகளும் தின்று பசியாறவும், பொரும்வேலா=போர்செய்த வேற்படையை யுடையவரே! செழிக்கும் உத்தம= திருவருளால் தழைத்துள்ளவர்களும் உத்தம குணங்களுடையவர்களு மாகிய, சிவசரணர்கள்=சிவனடியார்களும், தவ முநிகணத் தவர்=தவத்தின் மிக்க இருடியர் குழாங்களும், மதுமலர்கொடுபணி=தேன் துளிக்கின்ற நறுமலர்கொண்டு வழிபாடு செய்கின்ற, திருத்தணி பதி=திருத்தணி என்னுந் திருத்தலத்தில், மருவிய=எழுந்தருளியுள்ள, குறமகள் பெருமாளே=வள்ளிநாயகியாருக்குத் தலைவரே! சின தில தினை சிறுமணல் அளவு=சிறிய எள்ளளவும் தினையளவும் சிறுமணலளவும் ஆகிய, உடல் செறித்து எத்தனை=உடம்பினை எடுத்து உழன்ற பிறப்பு எத்தனை? அளவு இல்லை=எண்ணிலாதன, சிலை=மலைகளிலும், கடலினில்=சமுத்திரங்களிலும், உயிர் செனித்து எத்தனை=உயிரானது சென்று பிறந்த பிறப்பு எத்தனை? (அளவிலை). திரள் கயல் என பல=