திரண்டுள்ள கெண்டைமீனைப்போல் இங்குமங்குமாகப் பிறந்த பிறப்புக்கள் பல (அளவிலை). அதுபோதா=அதுவும் போதாமால், செமித்து எத்தனை=இயமன் ஒரு புறத்து சேமித்து வைத்த பிறப்பு எத்தனை? (அலவிலை). சிறு தன மயல்கொடு= சின்னத்தனமான செல்வத்தைக் கண்டு மயங்கி, செடத்தில் எத்தனை=ஜடவஸ்து போல் அறிவற்றுக் கிடந்த பிறப்பு எத்தனை? (அளவிலை). உயிர் நமன் பறிகொள்வது அளவு ஏதோ=உயிரைக் கூற்றுவன் பறித்துக் கொண்டு போனதற்கும் ஒரு அளவு உண்டோ? (இல்லை). மனத்தில் தோன்றும் எண்ணங்கள் எத்தனை? (அளவிலை). கவடுகள் எத்தனை=வஞ்சகம் எத்தனை? (அளவிலை). குடி கெடுத்தது எத்தனை=பிறர் குடிகளைக் கெடுத்தது எத்தனை? (அளவிலை). மிருகம் அது என உயிர் வதைத்த எத்தனை= மிருகங்களைப்போல் உயிர்களைக் கொன்றது எத்தனை? (அளவிலை). விதிகரம் ஒழியாமல்=பிரமதேவன் கை ஒழியாமல், வகுத்தது எத்தனை=விதிவிலக்கு எழுதியது எத்தனை? (அளவிலை). மசகனை=கொசுவுக்குச் சமானமானவனை, முருடனை= பிடிவாதமுடையவனை, மடைக்குலத்தனை=அறிவற்ற குலத்தில் பிறந்தவனை, மதி அழிவிரகனை=அறிவு அழிந்த வஞ்சகனை, மலர் பதத்தினில்=தேவரீருடைய திருவடிக் கமலத்தில், உருகவும்=உள்ளம் உருகுமாறு, இனி அருள் புரிவாயே=இனியாவது திருவருள் புரிவீர். பொழிப்புரை தனத்தனத்தன......திமித்த என்ற பலப்பல சந்த பேதங்களுடன் மத்தளமும் பேரிகையும் உடுக்கையும் கடல்போல் முழங்க சினத்துடன் கூடிய போர்க்களத்தில் உதிரம் பெருகித் தோயவும் இராக்கதர்களும் யானை குதிரை முதலியவைகளும் வில் முதலிய ஆயுதங்களும் பிளவு பட்டொழியவும் தசையுணவை நரிகளும் உண்டு மகிழவும் போர் புரிந்த வேலாயுதக் கடவுளே! அருட்செல்வத்தால் தழைக்கின்ற உத்தம சிவனடியார்களும், தவமே தனமாகவுடைய முனிபுங்கவர்களும் தேன் துளிர்க்கின்ற மலர்களைக்கொண்டு வழிபாடு செய்ய திருத்தணி மலைமீது எழுந்தருளியுள்ள வள்ளி மணவாளரே! சிறிய மணலளவும் தினையளவும் நொய் மணலளவும் உள்ள உடம்பினை எடுத்து உழன்று பிறப்பு எண்ணில்லாதன; திரண்டுள்ள கயல்மீனைப் போல் புரண்டு இங்கும் அங்குமாக எடுத்த பிறவிகள் எண்ணில்லாதன; அதுவும் போதாமல் கூற்றுவனால் ஒரு புறத்தே சேமித்து வைத்த பிறப்புக்களும் எண்ணில்லாதன; மலைகளிலுள்ள சுனைகளிலும் வேறுபல உலகங்களிலும் செல்வத்தால் மயங்கி ஜடம் போற் கிடந்த பிறப்புக்கள் எண்ணில்லாதன; இயமனால் இழுக்கப் பட்டனவும் |