துறுத்த மட்டைகள் அசடிகள் கசடிகள் முழுப்பு ரட்டிகள் கழுவிகள் மழுவிகள் துமித்த மித்திரர் விலைமுலை யினவலை புகுதாமல் அடைத்த வர்க்கியல் சரசிகள் விரசிகள் தரித்த வித்ரும நிறமென வரவுட னழைத்து சக்சிர கிரிவளை படிகொடு விளையாடி அவத்தை தத்துவ மழிபட இருளறை விலக்கு வித்தொரு சுடரொளி பரவந லருட்பு கட்டியு னடியிணை யருளுவ தொருநாளே படைத்த னைத்தையும் வினையுற நடனொடு துடைத்த பத்தினி மரகத சொருபியொர் பரத்தி னுச்சியி னடநவி லுமையரு ளிளையோனே பகைத்த ரக்கர்கள் யமனுல குறஅமர் தொடுத்த சக்கிர வளைகர மழகியர் படிக்க டத்தையும் வயிறடை நெடியவர் மருகோனே திடுக்கி டக்கட லசுரர்கள் முறிபட கொளுத்தி சைக்கிரி பொடிபட சுடரயில் திருத்தி விட்டொரு நொடியினில் வலம்வரு மயில்வீரா தினைப்பு னத்திரு தனகிரி குமரிநல் குறத்தி முத்தொடு சசிமக ளொடுபுகழ் திருத்த ணிப்பதி மலைமிசை நிலைபெறு பெருமாளே. பதவுரை அனைத்தையும் படைத்து=உலகங்கள் எல்லாவற்றையும் தோற்றுவித்து, வினையுற= கன்மங்களை துய்ப்பித்து, நடனொடு=நடிக்கின்ற சிவத்துடன் கூடி, துடைத்த பத்தினி= மீளவும் ஒடுக்கிய தேவியும், மரகத சொரூபி=மரகதம் போன்ற பச்சை வடிவத்தை யுடையவரும், ஓர் பரத்தின் உச்சியின் நடம் நவில் உமை=ஒப்பற்ற பரவெளியில் ஆனந்த நிர்த்தனஞ் செய்யும் உமையம்மையாரும் ஆகிய பார்வதிதேவியார், அருள் இளையோனே=பெற்றருளிய இளங்குமாரரே! பகைத்த அரக்கர்கள்=பகை கொண்டு எதிர்த்த இராட்சதர்கள், யமன் உலகு உற=கூற்றுவனுடைய நரகலோகத்தை யடையுமாறு; அவர் தொடுத்த=போரைத் தொடங்கிய, சக்கிர வளைகரம்=சக்ராயுதத்தையும் சங்கத்தையும் ஏந்திய திருக்கரத்தை யுடையவரும், அழகியர்=அழகுடையவரும், படி கடத்தையும் வயிறு அடை நெடியவர்=பூமியையும் அதிலுள்ள காடுகளையும் வயிற்றில் அடக்கிக் கொண்டு நீண்ட திருமேனியை யுடையவருமாகிய திருமாலினுடைய, மருகோனே=திருமருகரே! கடல் திடுக்கிட=சமுத்திரம் திடுக்கிட்டு அலறவும், அசுரர்கள் முறிபட=சூராதி அவுணர்கள் மாண்டொழியவும், இசைகிரி |