பொடிபட=இசைந்துள்ள குலமலைகள் தூள்படவும், கொளுத்து சுடர் அயில்= அனற்படுத்திய பேரொளி வீசும் வேலாயுதத்தை, திருத்திவிட்டு=நேர்மையுற விடுத்தருளி, ஒரு நொடியினில் வலம் வரு=உலகங்களை யெல்லாம் ஒரு நொடிப் பொழுதுக்குள் வலம் வந்த, மயில் வீரா=மயில்வாகனத்தையுடைய வீரரே! தினைப்புனத்து=தினைப் புனத்தில் வாழ்பவரும், இரு தனகிரி=மலைபோன்ற இரு பயோதரங்களையுடையவரும் இளம் பூரணியுமாகிய, நல்குறத்தி முத்தொடு=நல்ல முத்தனைய வள்ளியம்மையாருடனும், சசிமகளொடு=இந்திராணியின் திருமகளாகிய தெய்வகுஞ்சரி யம்மையாருடனும், புகழ் திருத்தணிபதி=புகழ் பெற்ற திருத்தணி என்னுந் திருத்தலமாகிய, மலைமிசை நிலைபெற பெருமாளே=திருமலைமேல் நிலைபெற்று வீற்றிருக்கும் பெருமையின் மிக்கவரே! தொட துளக்கிகள்=தொட்ட மாத்திரத்தில் அசைவு செய்து குலுக்குபவரும், அபகட நினைவிகள்=முறைமையில்லாத எண்ணத்தையுடையவர்களும், குருட்டு மட்டைகள்= காமத்தால் கண்கெட்ட அறிவில்லாதவர்களும், குமரிகள்=இளம் பெண்களும், கமரிகள்= விலக்கத்தக்கவர்களும், கதை சிறுக்கிகள்=கேட்டைத் தரும் சிறுக்கிகளும், குசலிகள்= தந்திரத்தைச் செய்பவரும், இசலிகள்=பிணங்குபவரும், முழு மோசம் துறுத்த மட்டைகள் =பூரணமான மோச குணங்களைத் திணித்து வைத்துள்ள மட்டிகளும், அசடிகள்= கீழ்மையானவரும், கசடிகள்=அடி மண்டிபோன்றவரும், முழுப் புரட்டிகள்=முழுப் புரட்டுகளைச் செய்பவரும், நழுவிகள்=நழுவுபவரும், மழுவிகள்=தங்கள் சூது வெளியுறா வண்ணம் மழுப்புபவரும், துமித்தமித்திரர்=பொருளை அறுக்கின்ற நட்பையுடையவரும், விலை முலையின வலை புகுதாமல் அடைத்தவர்க்கு=விலைகூறும் தனங்களினது வலையில் புகாமல் அடைந்தவர்களும், இயல் சரசிகள்=தமது தன்மையை சரசவார்த்தைகளால் புகுத்துபவரும், விரசிகள்=கலப்பவரும் ஆகிய விலமகளிர், தரித்த வித்ரும நிறம் என வர=பொருந்திய பவள நிறத்துடன் அருகில் வர, உடன் அழைத்து= அவர்களை அழைத்து உடனாக வைத்து, சக்கிர கிரிவளை படி கொடு விளையாடி= சக்ரவாள கிரியாற் சூழப்பெற்ற பூவுலகில் அவர்களுடன் விளையாடி, அவத்தை=துன்பத்தில், தத்துவம் அழிபட=உண்மைகள் அழிவுறுவதால், இருள் அறை= ஆணவ மனத்தை, விலக்குவித்து=தேவரீருடைய திருவருட் சக்தியால் நீக்குவித்து, ஒரு சுடர் ஒளி பரவ=நிகரற்ற ஞானவொளி வீசவும், நல் அருள் புகட்டி=குருவருளைப் பதித்து, உன் அடி இணை அருளுவது=தேவரீருடைய இரு திருவடிக் கமலங்களையும் தந்தருள்வது, ஒரு நாளே=ஒரு நாள் உண்டோ? பொழிப்புரை உயிர்கள் எல்லாவற்றையும் தோற்றுவித்து கன்மங்களைத் துய்ப்பித்து, ஆடுகின்ற அரனாருடன் அவைகளை மீளவும் ஒடுக்குகின்ற திருத்தேவியாரும், மரகதம் போன்ற திருவுருவுடையவரும், ஒப்பற்ற பரவெலியில் திருநடனம் புரிகின்றவருமாகிய உமையம்மையார் பெற்றருளிய இளம் புதல்வரே! பகைத்து |