பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 347

 

  “தவர்சோரப் புரித்திடும் பாவ சொரூபிகள்”
                                            -(குறித்தநெஞ்) திருப்புகழ்.

  “துறவினர் சோரச்சோர நகைத்துப் பொருள்கவர் மாதர்”
                                           (அரிசனவாடை) திருப்புகழ்.

  “முநிவோரும் மாலாகி வாட நகைத்துருக்கிகள்”     
                                       -(மாயாசொரூப) திருப்புகழ்.

படைத்தனைத்தையும்:-

சக்தியே யாவையும் படைத்தும் காத்தும் துடைத்தும் ஆன்மாக்கட்கு கன்மத்தைத் துய்ப்பித்து பக்குவம் வருவித்து உரிய காலத்தில் சிவத்தோடு அத்துவித முறுவித்து அருளுகின்றனள்.

உமை:-

உமா என்ற சொல் ஐகார ஈறுபெற்று உமை என்றாயிற்று. உ, ம, அ, இம்மூன்று அட்சரங்கள் கூடி உமா என்றாயிற்று. உகரம் காத்தற்றொழிலையும், மகரம் அழித்தற்றொழிலையும், அகரம் படைத்தற்றொழிலையும் செய்கின்றது. அருளே சக்தி யாதலின் காத்தற்றொழிலைக் குறிக்கும் உகரத்தை முதலாகக் கொண்டு உமா என்று வந்தது. அகர மகரத்தின் கூட்டுறவே ஓகாரமாகும்.

கருத்துரை

உமை மைந்தரே! மால்மருகரே! மயில் வீரரே! தணிகைத் தனிமுதலே! மாதர் மயக்குற்று அழியும் அடியேனை பலநீக்கஞ் செய்து மலர்த்தாள் தந்து காத்தருள்வீர்.

76

      எலுப்பு நாடிக ளப்பொ டிரத்தமொ
          டழுக்கு மூளைகள் மச்சொடு கொட்புழு
          விருக்கும் வீடதி லெத்தனை தத்துவ                சதிகாரர்
      இறப்பர் சூதக வர்ச்சுத ரப்பதி
           யுழப்பர் பூமித ரிப்பர்பி றப்புட
           னிருப்பர் வீடுகள் கட்டிய லட்டுறு                சமுசாரம்
      கெலிப்பர் மால்வலை பட்டுறு துட்டர்கள்
           அழிப்பர் மாதவ முற்று நினைக்கிலர்
           கெடுப்பர் யாரையு மித்திர குத்திரர்       கொலைகாரர்
      கிருத்தர் கோளகர் பெற்று திரிக்கள
           வரிப்பர் சூடக ரெத்தனை வெப்பிணி
           கெலிக்கும் வீடதை நத்தியெ டுத்தவ  ணுழல்வேனோ