செய்பவர்கள், சூது அகவர் சுதர்=சூதான உள்ளத்தையுடைய மக்கள், அபதி உழப்பர்= அந்த ஊரில் மழுப்புபவர்கள், பூமி தரிப்பர்=மண்ணில் தோன்றுவர், பிறப்புடன் இருப்பர்=பிறந்த பிறப்புடன் இருப்பர், வீடுகள் கட்டி அலட்டுறும் சமுசாரம் கெடுப்பர்= வீடுகள் கட்டி அலைச்சலுறும் சமுசார வாழ்க்கையில் வெற்றி பெறுவர், மால் வலைப்பட்டு உறுதுட்டார்கள்=ஆசை வலைப்பட்டுக் கிடக்கும் துஷ்டர்கள், அழிப்பர்=அழிவு செய்பவர், மாதவம் உற்று நினைக்கிலர்=பெரிய தவநிலையைச் சிறிதேனும் நினைக்காதவர்கள், யாரையும் கெடுப்பர்=எல்லோரையும் கெடுப்பார்கள், மித்திர குத்திரர்=நண்பர்கட்கு வஞ்சனை செய்வார்கள், கொலைகாரர்=கொலைபுரிபவர்கள், பெற்று திரி களவு அரிப்பர்=தீமையைப் பெற்று திரிந்து களவுத் தொழிலில் தினவு கொண்டவர்கள், சூடகர்=கோப உள்ளத்தினர், எத்தனை வெபிணி=எத்தனை கொடிய நோய்கள், கெலிக்கும் வீடு அதை நத்தி=இத்தகைய துர்க்குணங்கள் குடியிருக்க அவைகளுடன் போராடி வெல்லும் வீடாகிய இந்தவுடம்பை விரும்பி, எடுத்து இவண் உழல்வேனோ=உடம்பை எடுத்து இவ்வுலகில் அடியேன் திரிவேனோ? பொழிப்புரை ஒலிக்கின்ற பல வகையான பேரிகைகளை முழக்கிக் கொண்டு கடுமையான போர்க்களத்தில் எதிர்த்து வந்த சூராதி யவுணர்களை வெட்டியழித்து இருள் மயமாய் நின்ற கிரவுஞ்ச மலையைப் பிளந்து தேவரும் சித்தருந் துதிக்கச் செலுத்திய வேலாயுதரே! ஆசையுடைய இராவணனுடைய தலைகள் அற்று விழ வைத்தவரும், மகாபலியைச் சிறையில் வைத்தவரும், இரும்பு உலக்கையைப் பொடி செய்து கடலில் எறிந்தவருமாகிய திருமாலின் மருகரே! வலிக்குமாறு பிரமதேவனைக் குட்டியவரே! திருநடனம் புரிந்த, ஒப்பற்ற உலகை யீன்ற மரகதவல்லியாம் உமாதேவியை மணந்த பிதாவாகிய, பரப்பிரமப் பரசிவனுக்கு உபதேசித்தருளிய குருநாதரே! காட்டில் வாழும் மயில் போன்ற வள்ளி நாயகியை, மயக்கி யணைத்து உள்ளம் மகிழ்ச்சியுடன் தணிகையம்பதியில் வீற்றிருக்கும் பெருமிதம் உடையவரே! எலும்பு, நாடிகள், நீர், இரத்தம், அழுக்கு, மூளைகள், இழிந்த புழுக்கள், இவைகள் குடியிருக்கும் வீடு, அதில் எத்தனையோ தத்துவங்கள், மோசக்காரர்கள் அநீதி யுடையவர்கள், சூதான உள்ளத்து மக்கள், உடம்பான அந்தவூரில் மழுப்புவர், பூமியில் தோன்றுவர், பிறந்த பிறப்புடன் இருப்பர், வீடுகள் கட்டி அலைச்சலடையும் சமுசாரத்தில் வெற்றி பெறுவார்கள், ஆசை வலையிற்பட்டுக் கிடக்கும் பொல்லாதவர்கள், நன்மையை அழிப்பார்கள், பெரிய தவநிலையைச் சிறிதும் நினைக்காதவர்கள் யாவரையும் கெடுப்பார்கள், நண்பருக்குத் தீங்கு புரிவார்கள், கொலைஞர்கள், செருக்கு |