பக்கம் எண் :


350 திருப்புகழ் விரிவுரை

 

உடையவர்கள், கோள் சொல்லுபவர்கள், கொடுமையைப் பெற்று திரிந்து திருட்டுத் தனத்துக்குத் திரிவார்கள், கோப உள்ளத்தினர், கொடியநோய்கள், இவைகள் உறைய அவைகளுடன் வெற்றிபெறும் இந்த உடம்பாகிய வீட்டினை விரும்பி அதையே ஒழியாது எடுத்து இவ்வுலகில் அடியேன் உழல்வது முறையோ?

விரிவுரை

எலும்பு.........இருக்கும் வீடு:-

இந்த உடம்பை வீடாக உருவகம் புரிந்து சுவாமிகள் இந்தத் திருப்புகழில் விளகம் புரிகின்றார்.

எலும்பு, நாடி, நரம்புகள், நீர், உதிரம், மூளை, புழு முதலியன இந்த உடம்பில் உறைகின்றன.

எத்தனை தத்துவம்:-

இந்தவுடம்பில் ஆன்மதத்துவம் 24, வித்யாதத்துவம் 7, சிவதத்துவம் 5, ஆக 36 தத்துவங்கள் உறைகின்றன.

இவற்றின் விரிவை சிவஞான போத முதலிய சாத்திரங்களால் அறிக.

சதிகாரர்:-

இந்தவுடம்பில் வாழுந் துர்க்குணங்கள் இன்ன இன்ன என்று கூறுவாராயினார். சதி-வஞ்சனை; மோசக்காரர்கள் இதில் உறைகின்றார்கள்.

இறப்பர்:-

இறத்தல்-கடத்தல். நியாத்தைக் கடந்து அநீதியைச் செய்பவர்.

சூதகவர்ச்சுதர்:-

சூதான உள்ளத்துடன் கூடிய மக்களுக்கு வாய் வாழைப் பழமாகவும், மனங் கத்திரிக்கோலாகவும் இருகும்.

அப் பதி அழப்பர்:-

அந்த வீட்டில் வாழ்ந்துகொண்டு தமது பேச்சின் திறமையால் தீமையை நன்மைபோல் பேசி மழுப்புகின்றவர்கள்.