பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 353

 

பாரத யுத்தம் முடிந்து சில ஆண்டுகட்குப் பின், துவாரகையில் வாழ்ந்த யாதவர்கள், விருஷ்ணிகள், அந்தகர்கள் முதலியவர்கள் நிரம்ப மதம் பிடித்து வாழ்ந்தார்கள். அப்போது எங்கும் துர்நிமித்தங்கள் உண்டாயின. புழுதிக் காற்று வீசியது. எரி கொள்ளிகள் விண்ணிலிருந்து வீழ்ந்தன.

துவாரகபுரிக்கு விச்வாமித்திரர், கண்ணுவர், நாரதர் என்ற முனிவர்கள் வந்தார்கள். மதம் பிடித்த யாதவர்கள் கண்ணன் மகனாகிய சாம்பனை பெண்வடிவு புனைந்து வயிற்றில் துணி வைத்துக் கட்டி அம் மகா முனிபுங்கவர்களின் முன் சென்று “முனிவர்களே! இவள் பப்ருவின் மனைவி, கர்ப்பமாக இருக்கின்றாள்; இவள் வயிற்றில் ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா?” என்று கேட்டார்கள். முனிவர்கள் முகம் சிவந்தது; அவர்களது அகங்காரத்தை நினைத்து அவர்கள் சீற்றங் கொண்டார்கள். “இந்த சாம்பன் வயிற்றில் இரும்பு உலக்கை பிறக்கும்; அந்த வுலக்கையால் பலராமன் கிருஷ்ணன் தவிர மற்ற அத்தனை பேரும் அழிவீர்கள்; பலராமர் கடலில் புகுவார்; ஜரன் என்ற செம்படவன் பூமியில் சயனித்துக் கொண்டிருக்கின்ற கிருஷ்ணரைப் பிளக்கப் போகின்றான்” என்று கூறிவிட்டு சென்றார்கள்.

சிறந்த அறிவும் முடிவையறிந்த வுணர்வும் படைத்த வாசுதேவர் இதனைக் கேள்விப்பட்டு, “அது அப்படியே ஆகட்டும்” என்றார்.

மறுநாள் சாம்பன் அந்தக் குலத்தை யழிக்கவந்த அந்தகனுடைய தூதனைப் போன்ற ஒரு கரிய பெரிய இரும்பு உலக்கையைப் பெற்றான். யாதவர்கள் அதை அரங்கொண்டு ராவிப் பொடிப் பொடியாகச் செய்து கடலில் கொட்டினார்கள். பலராமர், கிருஷ்ணர், பப்ரு என்ற புண்ணிய சீலர்கள் “இன்று முதல் யாரும் மதுபானஞ் செய்யக் கூடாது. அப்படிக் குடித்தால் அவர்களைக் கழுவில் ஏற்றப்படும்” என்று பரைசாற்றச் செய்தார்கள்.

பின்னும் சில ஆண்டுகள் கழிந்தன. தலைமயிரில்லாத ஒரு முண்டன் கருநிறமும் பொன்னிறமும் கொண்ட வுருவுடன் யாதவர்களின் வீடுகளில் சென்று சென்று மறைந்தான். அவனைப் பலர் வில்லம்பால் அடித்தார்கள். எல்லாவுயிர்களையும் கொல்லுபவனாகிய அவனை அடிக்க முடியவில்லை. பயங்கரமான பெருங்காற்று அடித்தது. எலிகளும் உடைந்த மண் பாண்டங்களும் எங்குங் காணப்பட்டன. பறவைகள் ஓயாது