அச்சம் தரும்படி ஒலித்தன. ஆடுகள் நரிகள் போல் ஊளையிட்டன. நாய் வயிற்றில் பூனையும், கீரியிடத்தில் எலியும் பிறந்தன. இப்படிப் பலப்பல தீய சகுனங்கள் நேர்ந்தன. இவற்றைக் கண்ட கண்ணபிரான் ‘முப்பத்தாறாவது ஆண்டு வந்து விட்டது; காந்தாரியின் சாபம் விளையும் காலம் இது’ என உணர்ந்தார். தீர்த்தயாத்திரை செய்யும்படி யாதவர்கட்குக் கட்டளையிட்டார். யாதவர்கள யாவரும் பிரபாசபட்டினத்தை யடைந்தார்கள். உத்தவரை மட்டும் அவ்விடம் விட்டுச் சென்றார்கள். நிரம்ப மதுவைக் குடித்த அந்த யாதவர்கள் ஒருவரை யொருவர் இகழ்ந்து பேசினார்கள். அதனால் பெருங் கோபமுற்று ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கினார்கள். கடற் கரையில் முளைத்துள்ள இரும்புக் கோரைகளைப் பிடுங்கினார்கள். அவைகள் இரும்புக் கோடாரிகளாக ஆயின. அவற்றால் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டார்கள். கிருஷ்ணருடைய பிள்ளைகள், பேரன்கள், மற்ற யாதவர்கள் கண்ணனுடைய முன்னிலையிலேயே மாண்டார்கள். மிச்சமின்றி அத்தனை பேர்களும் அழிந்தார்கள். கண்ணபிரான் துவாரகை சென்று பெரிய பிதாவை வணங்கி “அர்ச்சுனன் வந்து உங்களைக் காப்பாற்றுவான்” என்று கூறிக் கானகம் போனார். தாரகன் என்ற தேர்ப்பாகன் தேரின் மீது ஏறி அத்தினாபுரம் போனான். காட்டில் ஏகாந்தமான இடத்தில் இருந்த பலராமரைப் பார்த்தார். யோக சமாதியில் அமர்ந்திருந்த பலராமருடைய முகத்திலிருந்து ஒரு வெள்ளைப் பாம்பு வெளிப்பட்டது. அந்தப் பாம்பு ஆயிரம் தலைகளுடன் வளர்ந்து கடலுக்குள் சென்றது. துருவாசர் “உள்ளங்கால் வழி ஆன்மா பிரியும்” என்று கூறிய சொல்லை நினைத்தார். குராமரத்தின் கீழ் இரண்யநதிக் கரையில் படுத்து யோகம் புரிந்தார். அந்த உலக்கையை ராவிக் கடலில் கொட்டியபோது மிகுந்த ஒரு ஈச்சங் கொட்டையளவுள்ள கூரிய துண்டைக் கடலில் எறிந்தார்கள். அதை ஒரு மீன் விழுங்கிற்று; அம்மீனைப் பிடித்தவர்கள் அவ்விரும்புத் துண்டைக் காட்டில் எறிந்தார்கள். அக்கூரிய இரும்பை ஜரன் என்ற வேடன் எடுத்துத் தன் அம்பின் முனையில் அமைத்துக் கொண்டான். அவன் தொலைவில் தெரிந்த கண்ணனுடைய சிவந்த திருவடியை செங்கழுகு என்று எண்ணி அந்தப் பாணத்தை விடுத்தான். பிறகு அவன் அருகில் வந்து, |