பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 355

 

கண்ணபிரானை வணங்கித் துதித்தான். அவனுக்கு அருள் செய்துவிட்டு, மண்ணும் விண்ணும் ஒளியினால் விளங்க தேவர்கள் துதி செய்ய கண்ணபிரான் வைகுந்தம் சேர்ந்தார்.

வலிக்கக் வேதனைக் குட்டி

பிரணவ மந்திரத்துக்குப் பொருள் தெரியாத பிரமதேவனுடைய நான்கு தலைகளில் முருகவேள் குட்டியபோது அவருடைய குடுமி விபூதிபோல் துகள்பட்டு உதிர்ந்தது.

       “நாலுமுக னாதியரி யோமென அதாரமுறை
           யாதவிர மாவை விழ மோதிபொரு ளோதுகென
           நாலு சிரமொடு சிகை தூளிபட தாலமிடு மிளையோனே”
                                         -(வாலவயதாகி) திருப்புகழ்.

ஒரு சகத்தை யீனவள்:-

அகில வுலகங்களையும் பெற்ற அன்னை பார்வதி; அத்தனை யுலகங்களையும் ஈன்றும் கன்னியாகவே விளங்குகின்றாள்.

       “அகிலாண்ட கோடியீன்ற
           அன்னையே பின்னையுங் கன்னியென மறைபேசும்
          ஆனந்த ரூப மயிலே”                              -தாயுமானார்.

உளமகிழ்ச்சியோடு திருத்தணி பற்றிய பெருமாளே:-

முருகவேள் குறிஞ்சி நிலமாகிய மலைகளில் வசிப்பவர். பல்வேறு மலைகளில் வசிப்பினும், திருத்தணிகை மலையில் அதிக மகிழ்ச்சியாக வசிக்கின்றார். இதை முருகவேளே வள்ளி நாயகியிடம் கூறுகின்றார்.

       “சுந்தரக் கிரி தொல் புவிதனிற் பல எனினும்
          இந்த வெற்பினில் ஆற்றவும் மகிழ்ச்சியுண்டெனக்கே”
                                                                    -கந்தபுராணம்.

கருத்துரை

திருத்தணிகேசா உடம்பெடுத்து அலையாவண்ணம் அருள் புரிவாய்.

77

  திருட்டு நாரிகள் பப்பர மட்டைகள்
           வறட்டு மோடியி னித்தந டிப்பவர்
           சிறக்கு மேனியு லுக்கிம டக்குகண்             வலையாலே