திகைத்து ளாவிக ரைத்தும னத்தினில் இதத்தை யோடவி டுத்தும யக்கிடு சிமிட்டு காமவி தத்திலு முட்பட அலைவேனோ தரித்து நீறுபி தற்றிடு பித்தனு மிதத்து மாகுடி லைப்பொருள் சொற்றிடு சமர்த்த பாலஎ னப்புகழ் பெற்றிடு முருகோனே சமப்ர வீணம தித்திடு புத்தியில் இரக்க மாய்வரு தற்பர சிற்பர
சகத்ர யோகவி தக்ஷிண தெக்ஷிண குருநாதா வெருட்டு சூரனை வெட்டி ரனப்பெலி களத்தி லேகழு துக்கிரை யிட்டிடர் விடுத்த கூளிகள் தித்திகு தித்தென விளையாட விதித்த வீரச மர்க்கள ரத்தமு மிரற்றி யோடவெ குப்ரள யத்தினில் விலக்கி வேல்செரு கிட்டுயிர் மொக்கிய மறவோனே பெருக்க மோடுச ரித்திடு மச்சமு முளத்தின் மாமகிழ் பெற்றிட வுற்றிடு பிளப்பு வாயிடை முப்பொழு தத்துமொர் கழுநீரின் பிணித்த போதுவெ டித்துர சத்துளி கொடுக்கு மோடைமி குத்ததி ருத்தணி பிறக்க மேவுற அத்தல முற்றுறை பெருமாளே. பதவுரை நீறு தரித்து=திருநீற்றினைத் தரித்து, பிதற்றிடு பித்தனும்=வேதங்களை மொழிந்த பித்தனாகிய சிவபெருமான், சமர்த்த=ஆற்றல் உடையவரே! பால=குழந்தையே! இதத்து= இனிமையாக, மா குடிலை பொருள் சொற்றிடு=பெருமை பொருந்திய பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசிப்பாயாக, எனபுகழ் பெற்றிடு=என்று தேவரீரைக் கேட்கும்படியான புகழைப்பெற்றுள்ள, முருகோனே=முருகக் கடவுளே! சமப்ரவீண= நிபுணரே! மதித்திடு புத்தியில்=போற்றுகின்ற அடியார்களின் புத்தியில், இரக்கமாய் வரு தற்பர=கருணையுடன் எழுந்தருளும் பரம்பொருளே! சிற்பர=அறிவுக்கு அப்பாற் பட்டவரே! சகத்ர யோக விதக்ஷிண=ஆயிரக்கணக்கான பல யோகங்களுள் சிறப்புற்ற தான மௌன யோகநிலையைக் கொண்ட, தெக்ஷிண குருநாதா=தெட்சிணா மூர்த்தியான குருநாதரே! வெருட்டு சூரனை வெட்டி=தேவர்களை அச்சப் படுத்திய சூரபன்மனைக் கொன்று, ரணபெலி களத்திலே=போரில் கொலையுண்ட இடங்களில், கழுதுக்கு இரை இட்டு=பேய்களுக்குப் பிணங்களை இரையாகக் கொடுத்து, இடர் விடுத்த கூளிகள்= அதனால் பசித்துன்பம் நீங்கிய பேய்கள், தித்திகுதித்தென விளையாட விதித்த வீர= |