பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 357

 

தித்திகு தித்தென்று தாள வரிசையுடன் விளையாடும்படிச் செய்த வீரமூர்த்தியே! சமர் கள ரத்தமும்=போர்க்களத்தில் உதிரமானது, வெகு ப்ரளயத்தினில் இரற்றி ஓட=பெரிய பிரளய வெள்ளம்போல் ஒலித்து ஓட, விலக்கி=தேவர்களின் துன்பத்தை நீக்கி, வேலை செருக்கி=வேலை நுழைவித்து, உயிர் மொக்கிய=உயிரையுண்ட, மறவோனே= வீரமூர்த்தியே! பெருக்கமோடு சரித்திடு மச்சமும்=மிகுதியாக உலாவுகின்ற மீன்கள், உளத்தில் மா மகிழ் பெற்றிட=உள்ளத்தில் மிகுந்த மகிழ்ச்சி பெற, உற்றிடு பிளப்பு வாயிடை=தமது பிளப்புள்ள வாயில், முப்பொழுதத்தும்=காலை உச்சி மாலையென்ற மூன்று வேளைகளிலும், ஓர் கழுநீரின்=ஒப்பற்ற செங்கழு நீரின், பிணித்தபொது வெடித்து=கட்டுள்ள மொட்டுகள் வாய் விரிந்து, ரசத்துளி கொடுக்கும் ஓடைமிகுந்த= தித்திக்கின்ற தேன் துளிகளைத் தருகின்ற சுனைபெருமையுடன் திகழும், திருத்தணி= திருத்தணி மலையில், பிறக்க மேவுற=விளக்கம் பொருந்த, அத்தலம் உற்று உறை= அத்திருத்தலத்தில் பொருந்தி வாழ்கின்ற, பெருமானே=பெருமையில் மிகுந்தவரே! திருட்டு நாரிகள்=திருட்டுத் தனமுள்ள பெண்கள், பப்பர மட்டைகள்=கூத்தாடும் பயனிலிகள், வறட்டு மோடி இனித்த நடிப்பவர்=பசையில்லாத செருக்குடன் இனிமையாக நடிப்பவர்கள், சிறக்க மேனி உலுக்கி=சிறப்புடன் உடம்பைக் குலுக்கி, மடக்கு கண் வலையாலே=அப்படியும் இப்படியும் திருப்புகின்ற கண்வலையினாலே, திகைத்து= மயக்குவித்து, உள் ஆவி கரைத்து=உள்ளுறையும் உயிரைக் கரையுமாறு செய்து, மனத்தினில் இதத்தை ஓட விடுத்து=மனத்தில் உள்ள இன்பத்தை ஓடிப்போகும்படிச் செய்து, மயக்கு இடு சிமிட்டு=மயக்கத்தைத் தருகின்ற கண் சிமிட்டலால், காமவிதத்திலும் உட்பட அலைவேனோ=காமவழியில் உட்படும்படி அலைவேனோ?

பொழிப்புரை

திருநீற்றைத் தரித்து வேதங்களைக் கூறிய பித்தனாம் சிவபெருமான், “சமர்த்தனே! குழந்தையே! பெரிய பிரணவப் பொருளை இனிமையாக உபதேசிப்பாயாக” என்று தேவரீரைக் கேட்கும் புகழ்பெற்ற முருகக் கடவுளே! நிபுணரே! போற்றுகின்ற அடியார்களது அறிவில் கருணையுடன் எழுந்தருளும் பரம்பொருளே! அறிவுக்கும் அப்பாற்பட்டவரே! ஆயிரக்கணக்கான யோகங்களுக்குள் சிறந்த சிவயோக நிலையைக் கொண்ட தட்க்ஷிணாமூர்த்தியான குருநாதரே! தேவர்களை அஞ்சும்படிச் செய்த சூரபன்மனைச் சங்கரித்து போரில் கொலையுண்ட இடங்களில் பேய்களுக்குப் பிணக்குவியல்களை உணவாகக் கொடுத்து, அதனால் பசித்துன்பம் நீங்கிய பேய்கள் தித்திதிதித் தென்று விளையாடும்படிச் செய்த வீரமூர்த்தியே! போர்க் களத்தில் உதிரம் பெரிய பிரளய வெள்ளம் போல் ஒலித்து ஓட துன்பத்தை விலக்கி, வேலை விடுத்து உயிரை உண்ட வீரக் கடவுளே! மிகுதியாக உலாவுகின்ற மீன்கள் உள்ளத்தில் மிக்க