பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 363

 

பாம்பனடிகள் முதலிய அனைவரும் தென்னாட்டில் அவதரித்தவர்களேயாகும். அதனால் தட்சிண குருநாதர் என்றார்.

வெருட்டு சூரனை, , ,, , மறவோனே:-

இந்த ஐந்தாவது ஆறாவது அடிகளில் போர்க்கள வர்ணனைகளையும் பேய்கட்கு உணவளித்த பெருமையையும், சூராதியவுணரை அழித்த போர்த் திறத்தையும் சுவாமிகள் கூறுகின்றார்கள்.

பெருக்கமோடு சரித்திடு மச்சமும்:-

திருத்தணியில் செங்கழுநீர் சுனை ஒன்று இன்றும் இருக்கின்றது. இச்சுனை கோயிலின் தென்புறம் இருக்கின்றது. சுனையின் முன்புறம் ஒரு சிறு கோபுரம் உளது. தேனால் அது கோயில்போல் காட்சி தரும். அதில் அர்ச்சகரை யன்றி பிறர் புகமாட்டார்கள். அச்சுனையில் செங்கழுநீர் மலர் மலரும். அச்சுனை நீரை தூய்மை செய்துகொண்டு மீன்கள் நிரம்ப உலாவும்.

உளத்தின் மாமகிழ் பெற்றிட ரசத்துளி கொடுக்கு மோடை:-

தன்னிடத்தில் வாழ்ந்து, தூய்மை செய்யும் அந்த மீன்கள் மகிழுமாறு செங்கழுநீர் மலர்கள் அம்மீன்கட்கு உணவு தந்து அவைகளை மகிழச் செய்கின்றன. என்னவுணவு தருகின்றன?  செங்கழுநீர் மலர் மூன்று வேளைகளிலும் மலர்ந்து மீன்களின் பிளந்த வாயில் தேன் துளிகளை வழங்கி உதவுகின்றன.

செங்கழுநீர் சுணையையுடையதால் திருத்தணி கல்லார கிரியென்று பேர் பெற்றது. செங்கல்வராயன் என்ற பேர் இதனால் ஏற்பட்டது.

கருத்துரை

தணிகேசா!  ஆசாபாசத்தில் சிக்கி அலையாமல் அடியேனை ஆட்கொள்ளும்.

வள்ளிமலை

வள்ளிமலை யென்ற திருத்தலம் வட ஆர்க்காடு மாவட்டம் இராய வேலூருக்குப் பன்னிரண்டு கல் தொலைவில் ஈசான மூலையில் விளங்குகின்றது. திருவல்லம் என்ற சிவதலத்துக்கு வடக்கேயுள்ளது. சிறந்த புனிதமான தேவிபீடம் வள்ளி நாயகியார் அவதரித்த அரிய தலம் பல சித்தர்களும், முத்தர்களும் வாழ்ந்த வாழ்கின்ற மகிமையுடையது.