அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு மல்லல்பட ஆசைக கடலீயும் அள்ளவினி தாகி நள்ளிரவு போலு முள்ளவினை யாரத் தனமாரும் இல்லுமினை யோரு மெல்லஅய லாக வல்லெருமை மாயச் சமனாரும் எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளி லுய்யவொரு நீபொற் கழல்தாராய் தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர் சொல்லுமுப தேசக் குருநாதா துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண வெள்ளிவன மீதுற் றுறைவோனே வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ வல்லைவடி வேலைத் தொடுவோனே வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு வள்ளிமண வாளப் பெருமாளே. பதவுரை தொல்லைமறை தேடி=பழமையான வேதங்கள் தேடிப் பார்த்து, இல்லை எனும் நாதர்=காணமுடியவில்லையென்று முறையிடுகின்ற சிவபெருமானுக்கு, சொல்லும் உபதேச=உபதேசத்தைச் சொல்லியருளிய, குருநாதா=குருநாதரே! துள்ளி விளையாடும்= துள்ளி விளையாடுகின்ற புள்ளி உழை நாண=புள்ளிமான் வெட்கப்படுமாறு, எள்ளி= இகழ்கின்ற வள்ளிபிராட்டியார் வாழ்ந்த, வனமீது உற்று உறைவோனே=வள்ளிமலைக் காட்டில் சென்று வாழ்கின்றவரே! வல் அசுரர் மாள=வலிமையுடைய அசுரர்கள் மாளவும், நல்ல சுரர் வாழ=நற்குணமுடைய தேவர்கள் வாழவும், வல்லை வடிவேலை தொடுவோனே=விரைவில் கூரிய வேலாயுதத்தை விடுத்தவரே! வள்ளிபடர் சாரல்= வள்ளிக்கொடி படர்ந்திருக்கின்ற சாரலுடன் கூடிய, வள்ளிமலை மேவு=வள்ளிமலை மீது எழுந்தருளியிருக்கும் வள்ளி மணவாள=வள்ளிமணவாளரே! பெருமாளே=பெருமையின் மிகுந்தவரே! அல்லி விழியாலும்=தாமரை யிதழ்போன்ற கண்ணாலும், முல்லை நகையாலும்=முல்லையரும்பை நிகர்த்த பல்லாலும், அல்லல்பட=துயரத்தையடையும்படி, ஆசை கடல் ஈயும்=ஆசையைக் கடல் போலத் தருகின்றவர்களும், அள்ள இனிது ஆகி=அள்ளியெடுக்கலாம் போன்ற இனிதாக அமைந்து, நள் இரவு போலும் உள்ள=நடு இரவுபோல் இருள் உள்ளதான, வினையார்=செய்கைகளை யுடையவர்களுமாகிய பொதுமாதர்களும் அ தனம் ஆரும் |